'இது அதுல்ல'.. ‘பும்ரா’ செயலுக்கு அஸ்வின் கொடுத்த சைலன்ட் ரியாக்ஷன்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அஸ்வின் போல பந்து வீசி கிண்டல் செய்த பும்ராவின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

'இது அதுல்ல'.. ‘பும்ரா’ செயலுக்கு அஸ்வின் கொடுத்த சைலன்ட் ரியாக்ஷன்
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 46 ரன்களும் எடுத்தனர்.

Bumrah spotted copying Ravichandran Ashwin's bowling action

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளும், ரபாடா 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர், இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கீகன் பீட்டர்சன் 62 ரன்களும், பவுமா 51 ரன்களும் எடுத்தனர்.

Bumrah spotted copying Ravichandran Ashwin's bowling action

இந்திய அணியை பொறுத்தவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர். தற்போது இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் போன்று குறும்பாக பந்து வீசி காட்டினார். இதைப்பார்த்த அஸ்வின் சிரித்துக்கொண்டே ஏதோ கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

RAVICHANDRAN ASHWIN, BUMRAH, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்