‘பும்ரா அடித்த பந்தில்’... ‘நிலைகுலைந்த ஆஸ்திரேலிய இளம் வீரர்’... ‘பயிற்சி ஆட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தலையில் காயம் காரணமாக வெளியேறுவது, அந்த அணியை நிலைகுலைய செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற்ற இந்தி போட்டியில், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி, கார்த்திக் தியாகி பந்தால் தலையில் தாக்கப்பட்டு கன்கசன் மூலம் வெளியேறினார்.
இன்று 2-வது பயிற்சி ஆட்டம் தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இது சிட்னி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முன்னணி வீரர்கள் சொதப்ப பும்ரா சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான கேமரூன் கிரீன் பந்து வீசினார். அப்போது பும்ரா அடித்த பந்து நேராக வந்தது. அதை கிரீன் பிடிக்க முயன்றார். பந்து கையில் சிக்காமல் வலது பக்கம் காதுக்கு மேல் தலையில் பலமாக தாக்கியது. இதனால் கிரீன் நிலைகுலைந்தார்.
ஆஸ்திரேலிய அணி மருத்துவர் பரிசோதித்தபோது, கிரீன் சற்று மயக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கன்கசன் (திடீர் தாக்குதலால் மூளையளர்ச்சி) மூலம் வெளியேறினார். கிரீன் முதல் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான கிரீன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
வில் புகோவ்ஸ்கியும் விளையாடும் நிலையில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இருவரும் தற்போது கன்கசன் மூலம் வெளியேற, ஆஸ்திரேலியா அணிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பும்ரா', நடராஜனுக்கு இடையே இருக்கும் 'ஒற்றுமை'... பக்காவா 'பட்டியல்' போட்ட 'சேவாக்'... "அப்போ 'நடராஜன்' பட்டைய கெளப்ப போறாரோ??..." எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!
- 'அப்படி என்ன தான் அவசரம் கோலிக்கு?.. பயங்கரமா சொதப்புறாரு!.. தோல்விக்கு காரணம் 'இது' தான்!.. நெஹ்ரா ஆவேசம்!
- மொதல்ல அவர டயர்டாக்கணும்...' 'அப்போ தான் நாங்க ஜெயிக்க முடியும்...' - ஹேசில்வுட் பேட்டி...!
- 'பவுலிங்'னா இப்படி இருக்கணும்... டபுள் விக்கெட் மெய்டன்!.. 'சும்மா... காட்டு காட்டுனு காட்டிட்டாரு!'.. பும்ராவின் மேஜிக் ஃபார்முலா 'இது' தான்!
- MIvsDC: 'தெறிக்க விடு.. சிதற விடு'... சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க.. வீரர்களை பாராட்டி பறக்கும் மீம்ஸ்!
- ‘நாங்க ரெடியா இருக்கோம்’... ‘நியூ லுக்குடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டார் பிளேயர்’... ‘நீங்க அவர மாதிரி இருக்கீங்க’... 'பாராட்டிய இளம் வீரர்'!
- "பும்ரா என்னங்க பும்ரா... அவர விட இவரு தான் 'best'... ஆனா என்ன 'டீம்'ல 'சான்ஸ்' தான் கெடைக்கல..." ஏங்கும் 'ரசிகர்'கள்!!!
- இந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா?.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..!
- ஆளு ரொம்ப 'அமைதி'... ஆனா களத்துல எறங்குனா சும்மா Beast மோடு தான்... 'ஜெயவர்த்தனே' புகழ்ந்த இந்தியன் பவுலர்!
- 'ஆர்.சி.பி.' அணியின் புதிய 'லோகோவுக்கு' மாடல் யார் தெரியுமா?... கடைசியில் அந்த 'பவுலரே' கிண்டல் அடித்து விட்டார்...