‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசியது குறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இதில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா அசத்தினார்.
இதுகுறித்து தெரிவித்த பும்ரா, ‘முன்பு நான் அதிகமாக இன்ஸ்விங்கர்களை வீசி வந்தேன். இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடியதால் அவுட் ஸ்விங்கர்களை வீசுவதில் கூடுதல் தன்னம்பிக்கை வந்துள்ளது. நானும் இஷாந்த் ஷர்மாவும் பவுலிங் க்ரீசின் அகலத்தை நன்றாக பயன்படுத்தி ஸ்விங் செய்கிறோம். இரண்டாவது இன்னிங்ஸின்போது மைதானம் ப்ளாட்டாக இருந்தது. அதனால் அதிகமான ஸ்விங்கை பயன்படுத்தினோம். என்னுடைய ஒவ்வொரு பந்தின் பின்னும் கடினமான உழைப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒவ்வோரு தடவையும் இப்டி பண்றாரு’.. ‘வாழ்நாள் முழுக்க இத ஃப்ரீயா கொடுங்க’.. மாஸ் வெற்றிக்குபின் ஸ்டோக்ஸின் வைரல் ட்வீட்..!
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- புது கெட்டப்பில் மாஸ் காட்டிய ‘தல’தோனி..! வைரலாகும் வீடியோ..!
- ‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!
- ‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
- ‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!
- இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- ‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?
- ‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..!