"அவருகிட்ட எல்லாம் 'ஓகே' தான்.. ஆனா, அந்த ஒரு 'விஷயம்' மட்டும் நடந்துச்சு.. மனுஷன் 'டென்ஷன்' ஆயிடுவாரு.." 'பும்ரா' பற்றி 'ஷமி' சொன்ன 'ரகசியம்'!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போதைய கிரிக்கெட் உலகில், எதிரணியினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி என்றால், நிச்சயம் இந்திய அணியைக் கைக் காட்ட முடியும்.
பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் பவுலிங் யூனிட், மற்ற கிரிக்கெட் அணிகளை கடந்த காலங்களில் அதிகம் அச்சுறுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், புதிதாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்களாக களமிறங்கி வரும் சிராஜ், நடராஜன் உள்ளிட்ட வீரர்களும் மிகச் சிறப்பாக, பங்காற்றி வருகின்றனர்.
இந்திய அணியின் பந்து வீச்சு பலத்திற்கு உதாரணமாக, சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி (Mohammed Shami), சக பவுலர்கள் குறித்து சுவாரஸ்யமாக சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
'இந்திய அணியின் பவுலிங் துறையில், பும்ரா சற்று வித்தியாசமானவர். அவர் அதிகமாக ஜோக் அடித்து பேச மாட்டார். சில சமயம், நாம் அவரைப் பற்றி பேசும் ஜோக்குகளை கூட, சீரியஸாக எடுத்துக் கொள்வார். ஆனால், நான், இஷாந்த், உமேஷ் ஆகியோர் ஒருவருக்கொருவர் மாறி மாறி கிண்டலடித்து பேசிக் கொள்வோம். நாங்கள் அனைவரும் மிகச் சிறந்த காம்போ. நான் கூட அதனை ரசிப்பேன். ஆனால், இதிலிருந்து பும்ரா வேறுபட்டவர்.
நாங்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு யூனிட்டாக ஆடி வருகிறோம். எங்களில் எத்தனை பேர் அன்றைய தினம் பந்து வீசினாலும், அதில் அதிகம் தாக்குதலை ஏற்படுத்த மட்டும் தான் முயற்சிப்போம். யாரேனும் ஒருவரது பந்து வீச்சில் தாக்கம் இல்லையென்றால், அவர் மட்டும் ஒதுங்கி விட்டு, மற்றவர்கள் பந்து வீச்சில் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
ஒட்டு மொத்தமாக, எங்களது அணியிலுள்ள அனைவரும், பந்து வீச்சில் ஒரு தாக்குதலை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம். இதனைத் தவிர்த்து, தற்காத்து ஆடுவதல்ல' என ஷமி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'மும்பை' டீம்'ல practice பண்ணிட்டு இருந்தப்போ.. 'பும்ரா' என்கிட்ட சொன்ன 'ரகசியம்' இது தான்.." 'இளம்' வீரர் பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
- 'மனைவி'யின் பிறந்தநாளுக்கு.. காதலில் உருகி 'வாழ்த்து' சொன்ன 'பும்ரா'.. "ப்பா, மனுஷன் எப்படி எல்லாம் ஃபீல் பண்ணி சொல்றாரு பாருங்க?!"
- 'நீ என்ன ஃபார்மல வேணாலும் இரு'!.. 'பவுலிங் போட்றது யாரு?.. எங்க தல பும்ராவ பாரு'!.. ராஜஸ்தானை கட்டிப்போட்ட கடைசி நிமிட மேஜிக்!!
- பும்ராவ எல்லாம் 'அவரு' தாண்டியாச்சு...! எத்தனை வேரியேசன்ல பவுலிங் போடுறாரு...! பிட்னஸ் மட்டும் பார்த்துக்கிட்டாருன்னா 'அவர் லெவலே' வேற...! இளம் இந்திய வீரரை மனதார புகழ்ந்து தள்ளிய நெஹ்ரா...!
- 'நீங்க பேட்ஸ்மேன் பக்கத்துலயே நின்னுக்கோங்க!.. ஓடுற வேல மிச்சமாகும்'!.. 'பந்து இன்னும் ரிலீஸ் கூட ஆகல'... 'ஒரு நியாயம் வேண்டாமா'?.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!
- 'அசல விட நகல்... நல்லாவும் இருக்கு... நக்கலாவும் இருக்கு'!.. ராஜஸ்தான் அணி வீரரின் அசாத்திய திறமை... வாயடைத்துப்போன பும்ரா!
- டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ‘பும்ரா’ தான் இன்னைக்கு டிரெண்டிங்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன பண்ணார்..?
- 'எப்படி பால் போட்டாலும் கேகேஆர் அடிக்குறாங்க'!.. 'இதுல மிஸ் ஃபீல்டிங்... மோசமான பவுலிங் வேற'... களத்திலேயே பஞ்சாயத்து செய்த ரோகித்!.. அதுக்கு அப்புறம் தான் சரவெடி!!
- கோலி பேட்டிங் ஆட வந்தா போதும்... ரோகித் இத கண்டிப்பா பண்ணுவாரு!.. ரோகித் விரித்த வலையில்... அலேக்காக விழுந்த கோலி!.. இந்த முறையும் போச்சா!!
- "இதுனால தான் உங்கள 'கல்யாணம்' பண்ணேன்.." 'பும்ரா' - 'சஞ்சனா'வின் 'க்யூட்' உரையாடல்!.. வைரலாகும் 'கமெண்ட்ஸ்'!!