'சம்பளம் வாங்குறதுல...' 'கோலி, ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்த இந்திய வீரர்...' - கோலியை பின்னுக்கு தள்ளியதற்கான காரணம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் விளையாடி வரும் பும்ரா 2020-க்கான அதிக சம்பளத்தை வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அவர்களின் திறமைக்கு ஏற்றபடி தரம் பிரித்து அதிக விலை கொடுத்தி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 15 லட்சம் ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டி-20 கிரிக்கெட் போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பும்ரா, தனது தனித்திறமையான பந்து வீச்சால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.

அதனடிப்படையில் பும்ரா 4 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 8 டி-20 போட்டிகளில் விளையாடி 1.38 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், விராட் கோலி 3 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 10 டி-20 போட்டிகள் என 1.29 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மெல்போர்ன் டெஸ்டில் விளையாடியிருந்தால் பும்ராவை தாண்டியிருப்பார்.

அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மா 3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியோடு 2020-ம் ஆண்டுக்கான போட்டி முடிவடைகிறது. ஜடேஜா 2 டெஸ்ட்,  9 ஒருநாள் மற்றும் நான்கு டி-20 போட்டிகள் என 96 லட்சம் ரூபாய் வாங்குவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்