'இவங்க தான் டாப் 5 பெஸ்ட் ப்ளேயர்ஸ்...' 'இந்தியா டீம்ல யாரெல்லாம் இருக்காங்க...? - பிரைன் லாராவின் டாப் ப்ளேயர்ஸ் லிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேற்கிந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரைன் லாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை வகைப்படுத்தி கூறியுள்ளார்.

பொதுவாகவே மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் அதிகபேர் பின்தொடரும் விளையாட்டுகளில் முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட். அந்தக் கிரிக்கெட் உலகின் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்  என அழைக்கப்படும் பிரைன் லாரா, தனக்கு எதிராக விளையாடிய ஐந்து சிறந்த வீரர்கள், உலகின் தற்போதைய ஐந்து சிறந்த பவுலர்கள் மற்றும் இந்த காலகட்டத்தின் ஐந்து  சிறந்த வீரர்கள்  உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

                           

பிரைன் லாரா, தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், காலிஸ், சங்கக்காரா, ராகுல் டிராவிட் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

                             

அதுமட்டுமில்லாமல், உலகின் தற்போதைய சிறந்த பந்து வீச்சாளர்களாக, ஜஸ்பிரிட் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர், ரபடா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

                                

மேலும் லாரா, இந்தக் காலகட்டத்தின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

                                 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்