ஏன் மனுசன் அப்படியொரு ‘முடிவு’ எடுத்தாரு..? கேதர் ஜாதவால் ‘ஷாக்’ ஆன கிரிக்கெட் ஜாம்பவான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் அணியின் கேதர் ஜாதவ் ரிவியூ கேட்டது குறித்து பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் (IPL) தொடரின் 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதபாராத் அணியும் (SRH), டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் (DC) மோதின. துபாய் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 134 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.5 ஓவர்களில் 139 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களும், ஷிகர் தவான் 42 ரன்களும், ரிஷப் பந்த் 35 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத் அணி வீரர் கேதர் ஜாதவ் (Kedar Jadhav) செய்த செயல் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதில், டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தை கேதர் ஜாதவ் எதிர்கொண்டார். ஆனால் பந்து கேதர் ஜாதவின் (3 ரன்கள்) காலில் பட்டுச் சென்றது. அதனால் அம்பயர் எல்பிடபுள்யூ கொடுத்தார்.

இதனை அடுத்து சக வீரர் அப்துல் சமத்திடன் இதுகுறித்து கேட்ட கேதர் ஜாதவ், உடனே மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ (Review) கேட்டார். ஆனால் ரிவியூவில் பந்து பேட்டில் படாமல் காலில் பட்டது தெளிவாக தெரிந்ததால், மூன்றாம் அம்பயரும் அவுட் என அறிவித்தார். முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, கேதர் ஜாதவ் ரிவியூவை வீணாக்கினார்.

இந்த நிலையில் கேதவ் ஜாதவ் ரிவியூ கேட்டது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா (Brian Lara) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஏன் அவர் ரிவியூ கேட்டார்? எங்களால் நம்பமுடிவில்லை. அங்கு என்னதான் நடக்கிறது என்று அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தோம்’ என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்