"அவங்க நல்ல 'ஃபிரண்ட்ஸ்' தான், ஆனா இப்போ கதையே வேற.." முட்டி மோதத் தயாராகும் 'நண்பர்கள்'.. 'பிரட் லீ' வார்த்தையால் எகிறும் 'எதிர்பார்ப்பு'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிக்காக, விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணி, சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்றடைந்தது. தற்போது குவாரன்டைனில் இருக்கும் இந்திய வீரர்கள், இன்னும் சில தினங்களில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்கள். மேலும், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என்பதால், யார் இந்த கோப்பையைக் கைப்பற்றி அசத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளிலும், உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில், வேகப்பந்து வீச்சு அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு, மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், இந்திய அணியின் வேக்கப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் (Jasprit Bumrah), நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட்டும் (Trent Boult) நெருங்கிய நண்பர்கள். இருவரும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் நிலையில், தங்களது அசாத்திய பந்து வீச்சுத் திறமையால், எதிரணியினரை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றனர். இதனால், அவர்களின் நட்பு, போட்டியின் தீவிரத்தை பாதிக்குமா என்ற கேள்வியும் தற்போது அதிகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இது பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ (Brett Lee), 'பும்ரா - போல்ட் இடையேயான நட்பு அப்படியே தான் இருக்கும். ஆனால், நீங்கள் அணிக்காக களமிறங்கும் பட்சத்தில், அனைத்துமே வேறு. இது ஒரு போர். நீங்கள் உங்களது நாடுகளுக்காகத் தான் சண்டை போடப் போகிறீர்கள். அது ஒரு போதும் மாறாது.

பும்ரா மற்றும் போல்ட் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவரின் பலம் மற்றும் பலவீனத்தையும் நன்கு அறிந்தவர்கள். இருவரின் சாதக மற்றும் பாதங்கங்களான விஷயங்களையும் நன்கு அறிவார்கள். உலக கிரிக்கெட்டிற்கு இது முக்கியமான போட்டி என நான் கருதுகிறேன்.


பும்ரா மற்றும் போல்ட் ஆகிய இருவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள். போல்ட் 140 வேகத்தில் பந்தை திருப்பி விடுவார். பும்ராவும் 'Duke' பந்துகளைக் கொண்டு எந்த பகுதியிலும் பந்தினை ஸ்விங் செய்யக் கூடியவர்.

இருவரும், தங்களது அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுவார்கள். அதே வேளையில், போட்டி முடிந்த பிறகு, இருவரும் தங்களை கட்டித் தழுவிக் கொள்வதையும் பார்க்கலாம் என நான் நம்புகிறேன்' என பிரட் லீ தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்