‘தலைமை பயிற்சியாளர் ஆன முன்னாள் சிஎஸ்கே வீரர்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..! எந்த அணிக்கு தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் முன்னாள் கேப்டனான பிரண்டம் மெக்கல்லம் கடந்த 2016 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், ஐபில், பிபிஎல் போன்ற டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மெக்கல்லம் அறிவித்தார்.

இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் கொல்கத்தா அணியின் சார்பாக மெக்கல்லம் விளையாடியுள்ளார். இதில் இவர் விளையாடிய முதல் போட்டியிலேயே 158 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 2 வருடம் விளையாடியுள்ளார். ஏற்கனவே கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜாக் காலிஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரண்டம் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

CSK, IPL, KKR, HEADCOACH, BRENDON MCCULLUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்