கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மரணமடைந்திருப்பது உலக கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தன்னுடைய 22 வருட கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 1282 கோல்கள் அடித்து, பிரேசில் அணியின் எப்போதைக்குமான லெஜெண்ட் வீரராக கருதப்படுபவர் பீலே.
எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ (Edson Arantes do Nascimento) என்ற இயற்பெயர் கொண்ட பீலே, பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. செப்டம்பர் 2021 இல் கேன்சரால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரது பெருங்குடலில் இருந்து கட்டி ஒன்று அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் பீலே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று பீலேவின் குடும்பத்தினர் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அவருடைய மகள் அறிவித்திருக்கிறார். இதனால் உலக கால்பந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Also Read | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. பிரதமரின் உருக்கமான ட்வீட்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிறுமியின் உயிரை காப்பாற்றிய வாட்ச்.. சரியான நேரத்துல கொடுத்த வார்னிங்.. செக் பண்ணப்போ தெரியவந்த அதிர்ச்சி..!
- புற்றுநோயால் இறந்தது டேவிட் மில்லர் மகளா? ரசிகையா? முழு தகவல் இதோ!
- கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலி.. "சிகிச்சை'ல இருந்தப்போ" ஆசையா கேட்ட விஷயம்.. களத்தில் இறங்கி அசத்திய காதலன்!!
- புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"
- 18 வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவர்.. லேடி கெட்டப்பில் வந்து சொன்ன விஷயம்.. நம்பிய மக்களுக்கு காத்திருந்த ஷாக்.!
- "எனக்கு கேன்சர் வந்துடுச்சு".. ஆன்லைனில் பணம் திரட்டிய பெண்.. ரூ.45 லட்சம் சேர்ந்த உடனே சுயரூபத்தை காட்டியதால் கொதித்துப்போன மக்கள்..!
- சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. இறுதி மூச்சுவரை போராடினீர்கள்.. சின்ன தல உருக்கம்!
- 'தூக்கத்தில் பாதியில் எழும்பி கதறி கதறி அழுகை'... 'ஐயோ, கனவில் நடந்த சம்பவம்'... 'உடனே ஹாஸ்பிடல் ஓடிய பெண்'... எப்படிங்க உங்களுக்கு தெரியும், நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்த டாக்டர்!
- 90 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மாதவிடாய்!.. சுருண்டு விழும் அளவுக்க சோர்வு!.. இளம்பெண்ணுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!
- VIDEO: இப்போ சந்தோசம் தானே பாட்டி...? 'நெனச்சத நடத்திக் காட்டிய பேத்தி...' - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ...!