"என்னங்க இது??.. இப்டி பண்ணதுக்கு நியாயமா அவர 'அவுட்' பண்ணி இருக்கணும்.." கொந்தளித்த 'முன்னாள்' வீரர்கள்.. 'சர்ச்சை'யை கிளப்பிய 'பிராவோ'வின் செயல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய சென்னை அணி, போட்டி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இந்த போட்டியில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய மொயின் அலி (Moeen Ali), ஆட்ட நாயகன் விருதினை வென்றார். இதனிடையே, இந்த போட்டிக்கு நடுவே சென்னை வீரர் பிராவோ (Bravo) செய்த செயல் ஒன்று, பல முன்னாள் வீரர்களின் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில், சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 20 ஆவது ஓவரை முஸ்தாபிஷுர் ரஹ்மான் வீசினார். அப்போது, பவுலிங் சைடில் நின்ற பிராவோ, ரஹ்மான் பந்து வீசுவதற்கு முன்பாகவே, சில அடிகள் கிரீஸை விட்டு வெளியே சென்று விட்டார்.


கிட்டத்தட்ட ஒரு யார்டுக்கு அதிகமான தூரத்தில், பிராவோ ரன் ஓட தயாராக நின்ற நிலையில், இதனைக் கண்ட வர்ணனையாளரும், இந்திய முன்னாள் வீரருமான ஹர்ஷா போக்லே (Harsha Bhogle), பிராவோவின் செயலை விமர்சனம் செய்தார்.

 

'நீங்கள் இத்தனை தூரம் முன்பு செல்லக் கூடாது. கிட்டத்தட்ட ஒரு யார்டுக்கும் அதிகமாக, பிராவோ வெளியே சென்று விட்டார். குறைந்த அளவில் மட்டுமே ஓடி, ஒரு ரன் எடுப்பது என்பது, போட்டியின் உணர்வுக்கு எதிரானது. அதே போல பிராவோ செயல்பட்டுள்ளதும் முட்டாள் தனமானது.' என ஹர்ஷா போக்லே குறிப்பிட் டார்.

அவருடன் வர்ணனையில் இருந்த நியூசிலாந்து வீரரான சைமன் டவுலும் (Simon Doull), பிராவோவை ரன் அவுட் செய்திருக்க வேண்டும் என்றும், பவுலர் மட்டும் கிரீஸை விட்டு வெளியே வந்தால், நோ பால் என அறிவிக்கப்படும் நிலையில், பேட்டிங் செய்யும் போது, இவ்வளவு தூரம் கிரீஸை விட்டு வெளியே வந்து ஒரு ரன்னை திருடுவது என்பதும் தவறான செயலாகும் என சைமன் டவுல் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரஷாத் (Venkatesh Prasad) கூட, தனது ட்விட்டர் பக்கத்தில் பிராவோவின் செயலைக் கண்டித்து, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். 'பந்து வீச்சாளர்கள் சில இன்ச் வெளியே வந்தாலே, அது நோ பால் என அறிவிக்கப்படும். ஆனால், பேட்ஸ்மேன் அப்படி செய்தால் மட்டும் தவறில்லை. இப்படிப்பட்ட நேரத்தில், குறிப்பிட்ட பேட்ஸ்மேனை பந்து வீச்சாளர்கள் ரன் அவுட் செய்ய வேண்டும்' என தனது ட்வீட்டில் வெங்கடேஷ் பிரசாத் கொந்தளித்துள்ளார்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில், ஜோஸ் பட்லரை அஸ்வின் 'மன்கட்' முறையில் அவுட் செய்திருந்தது, கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்