“தலதான் தலைசிறந்த கேப்டன்”!.... புகழ்ந்து தள்ளும் பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் மிகவும் பிரபலமான வீரர் பிராவோ. இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் தோனி, ரெய்னா மற்றும் உலக கோப்பை பற்றிய சில சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
அதில், ஐபிஎல் தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக உள்ளது. இதில், சிறந்த தலைமையின் கீழ் பயிற்சி பெறுகிறோம். மேலும், வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஐபிஎல் பெரிதும் உதவுகிறது. இதுதான் ஐபிஎல் தொடரின் சிறப்பு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிவது சந்தோஷமான விஷயம். இதனையடுத்து, சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த பாடகர் என்று கூறியுள்ளார்.
மேலும், தோனியின் தலைமை குறித்து என்னால் நிறைய சொல்ல முடியும், அவரது தலைமை குறித்து அனைவருக்கும் தெரியும். ‘இந்த உலகிலேயே தோனி தான் சிறந்த கேப்டன்’ என்று பிராவோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளை போல வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரு ரஸல் நல்ல ஃபார்மில் உள்ளார்கள் என்று பிராவோ கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’தோனி கிரிஸில் இருக்கும்போது பௌலர்ஸ்க்கு அள்ளு விட்ரும்’.. புகழ்ந்து தள்ளிய வீரர்!
- ‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!
- ‘தாஹிர் விக்கெட் எடுத்து ஓடும் போது நீங்க என்ன பண்ணுவீங்க’.. ‘தல’ கூறிய கலக்கலான பதில்!
- 'Dhoni is a Word'...'Thala is an Emotion'...'இன்னைக்கு உங்களோட டே'...நெகிழவைத்த 'தோனி'!
- 'அவர் பாதுகாப்பற்ற, பலவீனமான மனநிலை கொண்டவர்'.. கிரிக்கெட் பிரபலம் பற்றி பயிற்சியாளர்!
- 'என்ன தம்பி'...'எங்களுக்கே 'கேட்'போடுறீங்களா'...'களத்தில் சேட்டை'...வைரலாகும் வீடியோ!
- 'தலன்னு அழைக்கும்போது.. ரசிகர்களோட அந்த உணர்வு’.. ஃபீல் பண்ணிய கேப்டன் தோனி!
- ‘3 பந்தில் 2 ஸ்டெம்பிங்’.. மின்னல் வேகத்தில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!
- ‘சாரி தோனி’.. ‘ஜென்டில்மேன் கேம்’ என நிரூபித்த மோரிஸ்.. ‘தல’க்கு அப்டி என்ன நடந்தது?
- ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’.. களத்தில் இறங்கிய ‘தல’.. விசில் சத்தத்தால் அதிர்ந்த சேப்பாக்கம்!