‘ஆமாம் உண்மைதான்’!.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அசலங்கா 68 ரன்களும், பாத்தும் நிஸ்ஸங்கா 51 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ (Bravo) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து போட்டி முடிந்தபின் பேசிய, ‘ஆம் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 18 ஆண்டுகளாக விளையாடியதை நினைத்தால் பெருமையாக உள்ளது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், திரும்பிப் பார்க்கும்போது பெருமையாக உணர்கிறேன். இனி இளம் வீரர்களுக்கு என்னுடைய அனுபவங்களை ஆர்வமுடன் வழங்க இருக்கிறேன்.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது அவசியம். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் எங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கடினமாகதான் உள்ளது, ஆனாலும் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும்’ என பிராவோ தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு, டி20 உலகக்கோப்பை தொடருடன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி நாளை (06.11.2021) நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WESTINDIES, T20WORLDCUP, BRAVO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்