முன்னாள் 'வீரர்' நக்கலாக செய்த 'ட்வீட்'... மீண்டும் கடுப்பான 'ரோஹித்' ரசிகர்கள்... இவங்க மறுபடியும் 'start' பண்ணிட்டாங்கப்பா... 'பரபரப்பு' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 ஒரு நாள் போட்டி, 3 டி 20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முன்னாள் 'வீரர்' நக்கலாக செய்த 'ட்வீட்'... மீண்டும் கடுப்பான 'ரோஹித்' ரசிகர்கள்... இவங்க மறுபடியும் 'start' பண்ணிட்டாங்கப்பா... 'பரபரப்பு' சம்பவம்!!!

ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்கவுள்ள காரணத்தினால், ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் விளையாடி விட்டு இந்தியா திரும்பவுள்ளார். brad hogg trolled all rohit fans by sharing a meme in twitter

இதனால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை யார் கேப்டனாக வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரஹானே உள்ள நிலையில், ரோஹித் ஷர்மா தான் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். brad hogg trolled all rohit fans by sharing a meme in twitter

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்கிடம், ரசிகர் ஒருவர் ரஹானே 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஹாக், 'ரஹானே நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். கேப்டனாக மற்றொரு சிறந்த வீரர் ரோஹித் தான். ஆனால், வெளிநாடுகளில் நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டத்தை வைத்து அவருக்கு அணியில் இடம் கிடைப்பதே நிச்சயமில்லை' என தெரிவித்தார். 

 

ரோஹித் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதில்லை என ஹாக் கூறியதும் ரோஹித் ரசிகர்கள் பலர், ரோஹித்திற்கு ஆதரவாக பல கமெண்ட்டுகளை செய்தனர். இந்த முறை ரோஹித் தான் டெஸ்ட் தொடரில் குவிப்பார் என்றும் தெரிவித்து வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர், பிராட் ஹாக் ரோஹித் ரசிகர்களை விரட்டுவது போல மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை பகிர்ந்த ஹாக், 'clever' என குறிப்பிட்டிருந்தார். 

 

 

ஏற்கனவே ஹாக் மீது கடுப்பில் இருந்த ரோஹித் ரசிகர்கள், அவர் மீம் ஒன்றை பகிர்ந்ததால் மீண்டும் கோபத்துடன் கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே, இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவிற்கு இடம் கிடைக்காமல் போனது கோலி - ரோஹித் ரசிகர்களிடையே பெரும் பிரச்சனையை கிளப்பியிருந்த நிலையில், ஹாக் செய்த ட்வீட் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்