"இன்னைக்கி 'மேட்ச்'ல இவரை 'டீம்'ல எடுங்க... சும்மா சுத்தி சுத்தி அடிப்பாரு.." 'இந்திய' அணிக்கு 'ஐடியா' கொடுத்த 'ஹாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி, இன்றிரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக முதல் தர மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த போதும், சூர்யகுமாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனையடுத்து, பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, அவருக்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

டி 20 தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரர்கள் அதிகம் பேர் இடம்பிடித்துள்ளதால், இன்றைய போட்டியில், எந்த 11 பேர் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடக்க வீரர்களாக, ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் ஆடுவார்கள் என கேப்டன் கோலி நேற்று தெரிவித்திருந்தார். இதனால், மற்ற வீரர்கள் குறித்த விவரம் போட்டிக்கு முன்னரே அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரில், நான்காவது ஆர்டரில் களமிறங்க ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் போட்டியிலேயே சூர்யகுமாரை களமிறக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

'இன்றைய போட்டியில் சூர்யகுமார் நிச்சயம் ஆட வேண்டும். ஏனென்றால் அவர் மிகவும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். 360 டிகிரியிலும் சுழன்று சுழன்று ஆடக் கூடியவர். அதே போல, அவருக்கு பந்து வீசுவதும் கடினமாக அமையும்' என ஹாக் தெரிவித்துள்ளார்.

அதே போல, பந்து வீச்சு துறையில் அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க வேண்டும் என்றும் ஹாக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்