IND vs SA Test: ஆரம்பத்துல இருந்தே ஒரே தடங்கலா இருக்கு.. இப்போ இது வேறையா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான தொடர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அணி வரும் 26ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியானதில் இருருந்து பல தடைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரோன் வகை கொரானா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் வான்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பிரச்சினை ஓய்ந்த பிறகு போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.

மேலும் ஓமிக்ரோன் வைரஸினால் வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தென்ஆப்பிரிக்கா அணி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்காக காட்டுக்கு நடுவே பிரம்மாண்ட ஹோட்டலை புக் செய்துள்ளது. அங்கு வீரர்களுக்கு கடுமையான பயோ பபுள் கடைபிடிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஓமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரத்தன்மை காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் இதுவரை நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OMICRON, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்