“யார் சொன்னா.. இவங்களாலும் மேட்சை வின் பண்ணி கொடுக்க முடியும்”.. போட்டி முடிந்ததும் பாண்ட்யா அதிரடி பேச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பின் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியது கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் 15-வது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 மட்டுமே ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்
இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 5 ரன்னிலும், மேத்யூ வேட் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் சுப்மன் கில் (45 ரன்கள்), ஹார்திக் பாண்ட்யா (34 ரன்கள்), டேவிட் மில்லர் (32 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், 18.1 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘கூட்டு முயற்சி, சரியான அணி இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு குஜராத் அணிதான். நானும், பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ராவும், சிறந்த பவுலர்களை களமிறக்குவதில் உறுதியாக இருந்தோம். டி20 கிரிக்கெட் என்றாலே பேட்ஸ்மேன்களின் ஆட்டம், அவர்கள்தான் வெற்றியை பெற்றுக்கொடுப்பார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் பவுலர்களாலும் போட்டியை வென்று கொடுக்க முடியும்
அணியில் குறைபாடு எதுவும் இருக்கிறதா என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்துக்கொண்டேதான் இருந்தோம். அடுத்து வரும் தலைமுறை ஞாபகப்படுத்தி பார்ப்பார்கள். குஜராத் அணி தனது முதல் சீசனிலேயே கோப்பை வென்று அசத்தியிருக்கிறது என்று. இது நிச்சயம் சிறப்பான தருணம்தான்’ என ஹர்திக் பாண்ட்யா கூறினார். இந்த போட்டியில் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆத்தீ..! வந்த முதல் பாலே காலி.. தெறித்த ஸ்டம்ப்.. RCB-ஐ அலறவிட்ட RR இளம் பவுலர்..!
- ஒரே ஒரு சம்பவம்.. இளம் வீரரை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்.. வைரலாகும் முன்னாள் CSK வீரர் சொன்ன அட்வைஸ்..!
- “இந்த சீசன் முழுக்க சூப்பரா விளையாடி இருக்காங்க.. IPL கப் அந்த டீமுக்கு தான்”.. அடிச்சி சொல்லும் ஹர்பஜன் சிங்..!
- மாறி மாறி சூடான ரியான் - அஸ்வின்??.. கடைசி ஓவரில் நடந்த பரபரப்பு சம்பவம்... வைரலாகும் வீடியோ
- “அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன்”… ‘Mr 360’ டிவில்லியர்ஸ் நம்பிக்கை… உற்சாகத்தில் RCB ரசிகர்கள்
- MI அணியின் கையில் RCB-ன் ப்ளே ஆஃப் வாய்ப்பு.. ரிசல்ட் இன்னைக்கு தெரிஞ்சிடும்.. எப்படி தெரியுமா..?
- “ஏன் அந்த பையனுக்கு ஒரு மேட்ச்ல கூட வாய்ப்பு தரல?”.. ஒரு வழியாக கடைசி போட்டியில் விளக்கம் கொடுத்த கேப்டன் தோனி..!
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. KKR vs LSG மேட்சில் நடந்த வேறலெவல் சம்பவம்..!
- “வெறும் வெள்ளரிக்காய், பிரெட் சாப்பிட்டு கிரிக்கெட் விளையாடுவேன்”.. இதுவரை யாருக்கும் தெரியாத CSK வீரரின் உருக்கமான பின்னணி..!
- 'Playoff' போனதுல ஒரே குஷியோ.. தமிழ் பசங்க கூட சேர்ந்து.. ஹர்திக் பாண்டியா பாடிய தமிழ் பாடல்.. வைரல் வீடியோ!!