இந்தியா டீம் Whatsapp குரூப் மூலமா இளம் வீரருக்கு தெரிஞ்ச விஷயம்.. பல நாள் உழைப்புக்கு கெடச்ச அதிர்ஷ்டம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர், சமீபத்தில் முடிவடைந்தது.

Advertising
>
Advertising

Also Read | சிராஜ் செஞ்ச விஷயத்தால்.. கடுப்பில் மொறச்ச ரோஹித்.. "தீபக் கூட டென்சன் ஆயிட்டாரு".. பரபரப்பு!!

இந்த தொடரை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர், நாளை (06.10.2022) ஆரம்பமாகிறது.

மேலும், இந்த தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையில் பல இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்க உள்ளது.

மேலும், ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் ராஜத் படிதாரும் இந்திய அணியில் தேர்வாகி உள்ளார். மற்ற வீரர்கள் பலரும் சமீபத்தில் தொடர்ந்து இந்திய அணிக்காக இடம் பிடித்து வரும் நிலையில், முகேஷ் குமார் என்ற வீரரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்வாகி உள்ளார்.

பலருக்கும் யார் இந்த முகேஷ் குமார் என்பதும், அவர் எப்படி இந்திய அணிக்கு தேர்வானார் என்பதும் தான் கேள்விகளாக இருந்து வந்தது. இத்னைத் தொடர்ந்து, முகேஷ் குமார் பின்னுள்ள எமோஷன் பக்கம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தொடர்ந்து, தந்தையின் வேலை காரணமாக, அவர்கள் குடும்பத்துடன் கொல்கத்தாவிற்கும் குடி பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து, பெங்கால் அணிக்காக ஆடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. முகேஷ் தந்தைக்கு கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை என கூறப்படுகிறது. இதனால், மகனது கிரிக்கெட் ஆர்வத்திலும் அவர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை.

மகனும் அரசு வேலை சேர வேண்டும் என்று தான் விருப்பமும் கொண்டுள்ளார். தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அதனை கைவிட்டு படியும் முகேஷ் தந்தை ஒரு வாய்ப்பினை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனக்கு கிடைத்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட முகேஷ் குமார், ரஞ்சி டிராபி உள்ளிட்ட பல முதல் தர போட்டிகளில் தனது திறனை நிரூபித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு முகேஷின் தந்தையும் உடல்நல குறைவால் காலமானார். தொடர்ந்து சமீபத்தில், நியூசிலாந்து A அணிக்கு எதிராகவும், இரானி கோப்பை தொடரிலும் சமீபத்தில் தனது பந்து வீச்சில் பட்டையை கிளப்பிய முகேஷ் குமாருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்துள்ளது.

இது பற்றி பேசும் முகேஷ் குமார், "மறைந்த தந்தையின் முகம் தான் என் நினைவுக்கு வருகிறது. நான் கிரிக்கெட்டில் சாதிப்பேனா என்ற சந்தேகம் இருந்தது. அவர் இப்போது இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. நான் இந்திய அணியில் தேர்வானதும், எனது தாய் உள்ளிட்ட வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஆனந்த கண்ணீர் சிந்தினர்" என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, இந்திய அணிக்காக தேர்வானதும் அவர் இந்திய அணியின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் க்ரூப்பில் இணைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் தான் அடியில் தேர்வானதும் தனக்கு தெரிய வந்ததாக முகேஷ் குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | மனைவிகள் சம்மதம் வாங்கியே '5' கல்யாணம்.. ஒரே வீட்டுல 62 பேர்.. மகிழ்ச்சியாக வாழும் நபர்!!..

CRICKET, MUKESH KUMAR, BOWLER, INDIAN TEAM, ODI SERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்