'பேட்ஸ்மேன் தம்பி, இத போய் மிஸ் பண்ணிட்டீங்களே' ... கிரிக்கெட் பந்தை கால்பந்தாக்கிய பவுலர் ... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் பந்தினை எடுத்து கால்பந்து விளையாடுவதை போன்று செய்த அற்புதமான வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசிய பின் தனது கைக்கு வரும் பந்தினை காலால் எடுத்து 'Keepie-uppies' என்னும் கால்பந்து ஆட்டத்தில் பயன்படுத்தப்படும் முறை ஒன்றை பயன்படுத்தி அசத்தினார். இந்த வீடியோவை கிரிக்கெட் மற்றும் கால்பந்து ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

பந்து வீச்சாளர் தனது அற்புதமான கால்பந்து திறமையை காண்பித்த போது, பந்தினை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் இந்த அரிய நிகழ்வினை காணத் தவறிவிட்டார். கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஒருவர் கால்பந்து விளையாடும் போன்ற செயலில் ஈடுபட்டதை கண்ட ரசிகர்கள் மெய் சிலிர்த்து போயுள்ளனர்.

 

 

AAKASH CHOPRA, CRICKET, CHRISTIANA RONALDO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்