"அவரு கண்டிப்பா 'ஃபைனல்ஸ்'ல வேணும்.. அவர 'டீம்'ல எடுக்க வேணாம்'ன்னு நெனக்குறதே பெரிய 'தப்பு' தான்.." 'இந்திய' அணிக்கு வந்த 'எச்சரிக்கை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்த இறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிக முக்கியமான இந்த போட்டிக்காக, 20 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதல் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.
அதே போல, தற்போதைய இந்திய அணியில், அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் என அனைவரும் சிறப்பாக ஆடி வருவதால், ஆடும் லெவனில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மேலும், இங்கிலாந்து பிட்ச் சூழ்நிலை கொண்டு, எந்தெந்த வீரர்கள், அணியில் இடம்பெறலாம் என்பது பற்றியும், கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம். எஸ். கே. பிரசாத் (MSK Prasad), இந்திய அணியில் யார் களமிறங்க வேண்டும் என்பது பற்றி, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 'சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், நிச்சயம் ஆடுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு வேளை ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்திருந்தால், நிச்சயம் ஒரு ஸ்பின்னருடன் மட்டும் இந்திய அணி களமிறங்கியிருக்க வேண்டும்.
இல்லையென்றால், ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேனாக கருதி, களமிறக்க வேண்டும். அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நிறைய ரன்களைக் குவித்து வருகிறார். அதே போல, ஆடும் லெவனில் இருந்து, அஸ்வினை கைவிட வேண்டும் என நினைத்தால் கூட, அது மிகத் தவறான முடிவு தான்.
இங்கிலாந்தில் பிட்ச் கண்டிஷன்கள், வித்தியாசமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், அவருக்கு இருக்கும் அனுபவம், தற்போது அவரிடம் இருக்கும் ஃபார்ம் நிச்சயம் உதவும்' என பிரசாத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மஞ்ச்ரேக்கர்' சொன்ன கருத்தால் வெடித்த 'சர்ச்சை'.. "இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்ல.." 'அஸ்வினுக்கு' ஆதரவாக களமிறங்கிய 'இந்திய' வீரர்!!
- "அவர எப்படி 'பெஸ்ட்' பிளேயர்ன்னு சொல்றது??.."அஸ்வினை சீண்டிய 'மஞ்சரேக்கர்'.. பதிலுக்கு ஒரே ஒரு 'ட்வீட்' போட்டு வாயடைக்கச் செய்த 'அஸ்வின்'.. 'வைரல்' சம்பவம்!!
- 'அஷ்வின் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்'!?.. மஞ்ரேக்கரை வறுத்தெடுத்த இயான் சாப்பல்!.. இந்திய அணியின் மிகப்பெரிய 'ப்ளஸ்' அஷ்வின்!.. எப்படி?
- "இது மட்டும் 'ஃபைனல்ஸ்'ல நடந்துச்சு.. 'கோலி' அதோட 'காலி' தான்.." அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
- 'கோலி, ரோகித் விட... இவர் தான் இந்திய அணியின் சொத்து!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் game changer'!.. முன்னாள் வீரர் திட்டவட்டம்!
- 'இனி நமது எதிர்காலம் இப்படித் தான் தீர்மானிக்கப்படும்'!.. ஓலே ராபின்சன் நீக்கம் குறித்து... ரவிச்சந்திரன் அஷ்வின் நிலைப்பாடு என்ன?
- ‘கப்பு முக்கியம் பிகிலு’!.. தனி ஒருவனாக வெறித்தனமான ப்ராக்டீஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
- "'நியூசிலாந்து' டீம் அந்த ஒரு எடத்துல கொஞ்சம் 'மோசமா' தான் இருக்கு.. இந்த 'சான்ஸ' மிஸ் பண்ணிடாதீங்க.." 'இந்திய' அணிக்கு கிடைத்திருக்கும் பொன்னான 'வாய்ப்பு'?!
- "நீங்க சொல்றத ஒண்ணும் அப்படியே ஏத்துக்க முடியாது.." 'மஞ்சரேக்கர்' கருத்தால் எழுந்த 'சர்ச்சை'.. 'பதிலடி' கொடுத்த 'இந்திய' வீரர்!!
- 'என்ன நடந்தாலும்... 'அந்த' 2 பேர மட்டும் விட்ராதீங்க'!.. 'நியூசிலாந்தின் 'இந்த' பலவீனம்!.. இந்திய அணிக்கு செம்ம வாய்ப்பு'!