‘மொத்தம் 70 லட்சம் ஓட்டு’!.. மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்த ரசிகர்கள்.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் குறித்து ரசிகர்களிடம் நடத்திய வாக்கு எண்ணிக்கையின் முடிவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. பல முன்னனி வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், இளம்வீரர்களின் படையை கொண்டு ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் வராலாற்றில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த டெஸ்ட் தொடரை அறிவிக்கும் முடிவை ஐசிசி எடுத்தது. அதன்படி, ஐசிசி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. 15 டெஸ்ட் தொடர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 70 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை ஐசிசி தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இதனை அடுத்து கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்துக்காக நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, ஜடேஜா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினார்.

இதனால் ரஹானே தலைமையில் இளம்வீரர்களை கொண்ட இந்திய அணி எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றது. குறிப்பாக, 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் ஹப்பா மைதானத்தில் அந்த அணியை டெஸ்ட் போட்டியில் யாரும் வீழ்த்தியதில்லை. இந்த சாதனையை முறியடித்து இந்திய அணி வரலாறு படைத்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்