'கோலி தான் என் டார்கெட்!'... 'கோலியை அவுட்டாக்க துடிக்கும் போல்ட்டின் காரணம் என்ன?!'... நியூசிலாந்து வீரர் பக்கா ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கான எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி விக்கெட்டை வீழ்த்தி தன்னுடைய திறனை சோதிக்க இருப்பதாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் போட்டியை நியூசிலாந்தும் முழுமையாக வென்றுள்ளன.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி 21ம் தேதி தொடங்க இருக்கிறது. காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் போல்ட் டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவில்லை. ஆனால், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய போல்ட், "தனிப்பட்ட முறையில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது அவுட்டாக்கி எனது திறனை நானே சோதித்துக் கொள்வேன். ஆனால், கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். எல்லோருக்கும் தெரியும் அவர் எத்தகைய வீரரென்று" என்றார்.

மேலும், "போட்டி நடைபெறவுள்ள பேசின் பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. காயத்திலிருந்து மீண்டு வர எனக்கு 6 வாரங்களே இருந்தது. ஆனாலும், கடுமையான பயிற்சிக்கு பின்பு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுடனான போட்டி சவாலானதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நல்ல டெஸ்ட் போட்டியை எதிர்பார்க்கலாம்" என்று குறிப்பிட்டார்.

VIRATKOHLI, CRICKET, IND, NZ, TEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்