‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB-க்கு வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 14-வது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் பெங்களூரு அணியைச் சேர்ந்த இளம்வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு அவரால் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்க முடியாது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுகமான இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், 15 போட்டிகளில் விளையாடி, 473 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தேவ்தத் பட்டிகல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரால் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேவ்தத் பட்டிகல் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பெங்களூரு அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவருக்கு மாற்றாக யாரை களமிறக்கலாம் என அணி நிர்வாகத்துடன் கேப்டன் விராட் கோலி தீவிர ஆலோசானை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த இளம்வீரர் அக்சர் படேலும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்