அடேங்கப்பா..! 6 வருசம் கழிச்சு இப்போதான் ஒரு ‘நோ பால்’ போட்றாரு.. மிரட்டும் இந்திய பவுலர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் 6 வருடங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக நோ பால் வீசியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கைக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (20.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 35 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரைசதம் (50 ரன்கள்) அடித்து ஆட்டமிழந்துள்ளார்.

இப்போட்டியில் பவுலிங் செய்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘நோ பால்’ வீசியுள்ளார். கடைசியாக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஒருநாள் போட்டியில் அவர் நோ பால் வீசியுள்ளார்.

அதன்பிறகு, தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5-வது ஓவரை வீசியபோது ஒரு நோ பால் வீசினார். சர்வதேச கிரிக்கெட்டில் 6 வருடங்களாக 3093 பந்துகளை வீசியுள்ள புவனேஷ்வர் குமார், இப்போதுதான் ஒரு நோ பால் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்