'நமக்கு ஏன் ராசி சரியில்லையா'? ... 'இவரும் விளையாடுறது கஷ்டம்' ...அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும், வீரர்கள் தொடர்ச்சியாக காயமடைந்து வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.தவான் காயமடைந்ததால் நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார்.இதனிடையே வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயமடைந்திருப்பது ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மான்செஸ்டரில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியானது கிரிக்கெட் உலகில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட போட்டியாகும். இதனால் மைதானமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி,40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.
இதனிடையே நேற்றைய போட்டியின் ஐந்தாவது ஓவரை புவனேஸ்வர்குமார் வீசிய போது,வழுக்கி கீழே விழுந்தார்.இதையடுத்து மைதானத்தைவி்ட்டு வெளியேறிய அவர்,மீண்டும் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி ''புவனேஸ்வர் குமார் காயம் குணமடைய சில நாட்கள் ஆகும்.எனவே அவர் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக முகம்மது ஷமி அணியில் சேர்க்கப்படுவார்'' என்றும் கோலி கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சேட்ட புடுச்ச பைய சார் நம்ம கோலி’.. யாரை இப்டி கிண்டல் பண்றாரு?.. வைரலாகும் வீடியோ!
- ‘என்னடா கொட்டாவி எல்லாம் விட்றீங்க’.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்!
- ‘வீசிய முதல் பந்திலேயே உலகசாதனை’.. மரண வெய்ட் காட்டிய விஜய் சங்கர்!
- “இந்தியாவா, பாகிஸ்தானா எது சிறந்த அணி?” வைரலாகும் பாகிஸ்தான் பாட்டியின் பதில்..
- ‘திடீரென ஏற்பட்ட காயம்’.. பாதியிலேயே வெளியேறிய இந்திய அணியின் முக்கிய வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘கொஞ்சம் கவணமா இருந்திருக்கலாம் கோலி’.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
- மழையால் இந்தியாவுக்கு பாதிப்பா?.. மீண்டும் ஆட்டம் காட்டிய மழை!
- ‘அதிவேக சதம், தோனியின் சாதனையை முறியடிப்பு’.. ஒரே போட்டியில் மாஸ் காட்டிய ‘ஹிட்மேன்’!
- ‘கெடச்ச ஒரு சான்ஸ்யையும் மிஸ் பண்ணிடீங்க ’.. ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய இந்தியா!
- 'இந்திய அணியில் அதிரடி மாற்றம்?'... 'மிடில் ஆர்டரில் யாருக்கு வாய்ப்பு?'...