VIDEO: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. ‘ஒத்த பந்தில் மாறிய ஆட்டம்’.. வெறித்தனமான சம்பவம் பண்ணிய RCB விக்கெட் கீப்பர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா 48 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் தேவ்தத் படிக்கல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து ஏபி டிவில்லியர்ஸும் 26 ரன்களில் அவுட்டாகினார். இதனால் 55 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை பெங்களூரு அணி இழந்தது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் (KS Bharat) மற்றும் மேக்ஸ்வெல் (Maxwell) கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அணி திணறியது.

இதனால் 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு பெங்களூரு அணி வந்தது. அப்போது ஆவேஷ் கான் (Avish Khan) வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் பவுண்டரிக்கு விளாசினார். இதனை அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். 3-வது பந்தில் சிங்கிள் எடுத்து கே.எஸ்.பரத்துக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட கே.எஸ்.பரத், அதை அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டின் அருகில் குத்தி விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதனால் நூலிழையில் அவுட்டில் இருந்து தப்பினார். இதனை அடுத்து 5-வது பந்தை அருகில் அடுத்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார். ஆனால் அக்சர் படேல் மிஸ் ஃபீல்ட் செய்யவே, அதில் இரண்டு ரன்கள் கிடைத்தது.

இந்த நிலையில் கடைசி பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு பெங்களூரு அணி வந்தது. ஆனால் அந்த பந்தை வொய்டாக ஆவேஷ் கான் வீச, பெங்களூரு அணியின் வெற்றிக்கு 5 ரன்களே தேவைப்பட்டது.

அதனால் பவுண்டரில் அடித்தால் சூப்பர் ஓவருக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்க்காத வகையில் கடைசி பந்தை கே.எஸ்.பரத் சிக்சருக்கு விளாசினார். இதனால் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்