'ரெண்டே 2 பேர ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி...' 'தங்கத்தை தட்டி தூக்கி...' - கெத்து காட்டும் குட்டி நாடு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிறிய நாடு ஓன்று ஒலிம்பிக் போட்டிக்கு வெறும் 2 வீரர்களை மட்டுமே அனுப்பி தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மிக சிறிய நாடான பெர்முடாவில் இருந்து வெறும் 2 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
பெர்முடா சார்பாக டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற 33 வயதான ஃப்ளோரா டஃப்பி என்ற வீராங்கனை டிரையத்லான் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்த டிரையத்லான் போட்டி நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும். முதலில் 1,500 மீட்டர் நீச்சலும், அதன் பிறகு 40 கி.மீ தொலைவு சைக்கிள் பயணமும், அதனை அடுத்து 10 கிலோ மீட்டர் தொலைவு ஓட்டமும் இடைவிடாது இருக்கும். தொடர்ச்சியாக மூன்று கட்டங்களை முடிக்க வேண்டும். டஃப்பியோ முன்றையும் வெற்றிகரமாக செய்து தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறிய டஃப்பி, 'நான் வாங்கும் முதல் தங்கம் இது. என்னுடைய கனவும், அதற்கு மேலாகப் பெர்முடாவின் கனவும் இன்று நிறைவேறியுள்ளது' என பெருமையுடன் கூறியுள்ளார்.
40 கி.மீ நீளம் கொண்ட பெர்முடா நாட்டில் மொத்தம் 68 ஆயிரம் மட்டுமே உள்ளனர். அதோடு, டஃப்பி பங்கேற்ற 51.5 கி.மீ தொலை கொண்ட டிரையத்லான், அவரது நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'ஒலிம்பிக் போட்டியில் கியூட் லவ் ஸ்டோரி'!.. டிவி நேரலையில் சட்டென்று propose செய்த பயிற்சியாளர்!.. டபுள் ஓகே சொன்ன வீராங்கனை!
- 'என்ன வயசு ஆவுது இந்த பாப்பாவுக்கு'!?.. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தட்டித் தூக்கிய சிறுமி!.. உலக சாதனையை அசால்ட்டாக நிகழ்த்திய சம்பவம்!
- ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானு!.. செம்ம ஷாக் கொடுத்த 'அந்த' அறிவிப்பு!.. வாழ்நாள் முழுவதும் கிடைக்கப்போகும் 'சல்யூட்' மரியாதை!
- 'ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு... தங்கம் வெல்ல வாய்ப்பு'!.. கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி!.. பரபரப்பு பின்னணி!
- 'எதுவும் முடிஞ்சு போயிடல்ல!.. இனிமே தான் ஆட்டம் இருக்கு'!.. தோல்வி அடைந்தாலும்... இந்தியாவை தலை நிமிர வைத்த பவானி தேவி!
- 'கூலி வேலை செய்யும் பெற்றோர்'!.. சபதம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி... ஒலிம்பிக்கில் சாதனை படைத்த... இந்த மீராபாய் சானு யார்?
- 'முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம் என்று...' - தொடங்கியது 'ஒலிம்பிக்' திருவிழா...!
- கடைசி நேரத்துல ஒலிம்பிக் 'கேன்சல்' ஆக சான்ஸ் இருக்கா...? ஒலிம்பிக் போட்டித் தலைவர் அளித்துள்ள பதில்...!
- "கனவை நெருங்கி விட்டோம்"!.. 'ஆனா அது நிறைவேறுமா'?.. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாதாரண சூழல்!.. இந்திய ஹாக்கி அணி எமோஷனல் கடிதம்!
- போட்டியாளர்கள் நெருக்கமாவதை தடுக்க... 'புதியவகை கட்டில்களை அமைத்து'... 'ஷாக் கொடுத்த ஒலிம்பிக் நிர்வாகம்'! - டிரெண்டாகும் படங்கள்!