"'ஐபிஎல்'ல வெச்சு 'சூதாட்டம்' நடக்குது..." உடனடியாக 'ரைடு' நடத்திய 'அதிகாரி'கள்... வெளியான 'அதிர்ச்சி' தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா ஊரடங்கு காரணமாக, 13 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளை வைத்து இந்தியாவின் பல பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பெங்களூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான சில பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் (Central Crime Branch) நடத்திய சோதனையில், 4 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்ச ரூபாய் மற்றும் 6 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதமும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 6 பேரை கைது செய்திருந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 6 லட்ச ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது.

ஐபிஎல் தொடர் நடைபெறும் போது ஆண்டுதோறும் பல சூதாட்ட புகார்கள் எழுந்து வரும் நிலையில், அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதில் இருந்து அவர்களுக்கு சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வு குறித்து அறிவுறுத்தப்பட்ட நிலையில், யாரேனும் சூதாட்டம் குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக தெரிவிக்கவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்