அதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமன்னிப்பு கேட்க முடியாது என அடம்பிடித்த மூத்த வீரர் அசோக் டிண்டாவை, பெங்கால் அணி அந்த அணியில் இருந்து நீக்கியுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அசோக் டிண்டா 116 முதல்தர போட்டிகளில் ஆடி 420 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி போட்டியில் அசோக் டிண்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எனினும் சமீபகாலமாக அவர் பெங்கால் அணியின் பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் ஆகியோருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனால் தான் சையது முஷ்டாக் அலி தொடரிலும் அசோக் டிண்டாவை சேர்க்கவில்லையாம். இதனால் ரஞ்சி டிராபிக்கான பயிற்சி ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் முரண்டு பிடித்துள்ளார்.
அணியின் சீனியர் வீரர் என்பதால் அப்போது யாரும் அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா அணிக்கு முன்பான போட்டிக்கு முன் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரர்கள் அறையில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், பந்துவீச்சு பயிற்சியாளர் ராணாடெப் போஸ் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அங்கே வந்த அசோக் டிண்டா இருவரும் தன்னை தாக்கி பேசுவதாக கூறி, போஸைத் தாக்கி கண்டபடி பேசி இருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த பெங்கால் கிரிக்கெட் சங்கம், டிண்டாவை மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளது. இதற்கு டிண்டா மறுத்ததால் அவரை அணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. அநேகமாக டிண்டா இனி அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடந்த 10 வருஷத்துல உங்களுக்கு புடிச்ச கேப்டன் யாரு..? ரசிகர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
- பஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!
- ‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!
- ‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’!.. மனம் திறந்த கேப்டன் கோலி..!
- இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு?... விவரம் உள்ளே!
- நீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...
- ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?
- உடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்?
- ஐபிஎல்லில் 'கேப்டன்களுக்கு' இணையான... 'சம்பளம்' வாங்கும் இளம்வீரர்... எவ்ளோ தெரியுமா?
- ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் 'சம்பள' விவரம்...கிங் கோலிக்கு... அடுத்த 'எடம்' இவருக்கு தான்!