பென் ஸ்டோக்ஸ்-ஐ தட்டித் தூக்கிய CSK.. அணிக்குள் வந்ததும் ஆல் ரவுண்டர் போட்ட அசத்தல் ட்வீட்!! போடுறா வெடிய 🔥🔥!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சுற்றியுள்ள பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | முதல் ஆளா ஏலத்துல போன வில்லியம்சன்.. "ஆனாலும் இப்டி ஒரு விலையா.?".. மனம் குமுறும் ரசிகர்கள்!!

2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.

இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போய், ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் மாறி உள்ளார் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மிக முக்கியமான வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, ஐபிஎல் தொடரில் தோனியுடன் இணைந்து புனே அணியில் ஆடி இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பின்னர், தற்போது மீண்டும் தோனியுடன் இணைந்து சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோக்ஸை சென்னை அணி எடுத்த பிறகு, இது தொடர்பாக ட்வீட் ஒன்றையும் அவர்கள் செய்திருந்தனர். அதில், ராஜஸ்தான் அணியில் ஆடும் ஸ்டோக்ஸ் மற்றும் சென்னை அணி வீரர் ஜடேஜா ஆகியோர் மைதானத்தில் கீழே விழுந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பென் ஸ்டோக்ஸை வாங்கியதை வியப்புடன் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போல, சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட தேர்வானதும் பென் ஸ்டோக்ஸ் செய்த ட்வீட்டும் அதிகம் வைரலாகி வருகிறது. சென்னை அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தை குறிப்பிட்டு, ஒரே ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றும் வருகிறது.

 

Also Read | ஐபிஎல் மினி ஏலம் : வரலாறு படைத்த சுட்டிக் குழந்தை சாம் குர்ரான்.. ஆத்தாடி இத்தனை கோடியா?

CRICKET, BEN STOKES, BEN STOKES TWEET, CSK, IPL AUCTION 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்