'சும்மா சொல்லிட்டு இருக்கத விட...' 'செஞ்சு காட்டுறது ரிஸ்க்...' 'இந்த தடவ பிட்ச் கொஞ்சம்...' - ஸ்டோக்ஸ் கூறிய கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் குறித்து பல காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தனர் இங்கிலாந்து சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள்.

அதையடுத்து தற்போது இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்தியா முதல்நாளில் 24/1 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது.

ஆட்டம் முடிந்த பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகொடுத்த பென் ஸ்டோக்ஸ், நரேந்திர மோடி ஸ்டேடியம் முன்புபோல் இல்லை எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் முதல் நாள் ஆட்டம் குறித்து கூறும் போது, 'சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பேசுவதைவிடச் செயல்படுவது மிகக் கடினம். இந்த நான்காவது இன்னிக்ஸில் 300 ரன்களை கடப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை. ஆனால் கடைசியில் இந்தியாவின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது' எனக் கூறியனார்.

மேலும் மைதானம் குறித்து பேசிய அவர், 'முன்பு விளையாடியதுபோல் அல்ல. மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. நேராக வரும் சுழற்பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டரை மணி நேரம் நிதானமாக விளையாடி வந்தேன். இறுதியில் நேராக வந்த பந்தில்தான் ஆட்டமிழந்தேன்' எனவும் கூறியிருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா அல்லது வெற்றிபெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்