'கைவிரலில் ஏற்பட்ட காயம்...' சிடி ஸ்கேன் எடுத்தபோது தெரிய வந்த 'அதிர்ச்சி' ரிப்போர்ட்...! - கன்ஃபார்ம் ஆன உடனே பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ள முடிவு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிறிஸ் கெய்ல் ஆக்ரோஷமாக அடித்த பந்தை பிடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பென் ஸ்டோக்ஸ் கைவிரலில் முறிவு ஏற்பட்டது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் ஆக்ரோஷமாக அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தார். அப்போது பென் ஸ்டோக்ஸின் கைவிரலில் பலத்த காயம் உருவானது.

இதன் காரணமாக இந்த சீசன் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் எனவும், ஆனால் அணியுடன் கூட இருந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்திருந்தது. இதனால் நேற்று (15-04-2021) நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் தற்போது எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில், இடது கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானது. இதன்காரணமாக பென் ஸ்டோக்ஸ் பனிரெண்டு வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பென் ஸ்டோக்ஸ் சொந்த நாடு திரும்புகிறார். நாளை (17-04-2021) பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்படுகிறார், பின்னர் அங்கு அறுவை சிகிச்சை செய்தபின் ஓய்வெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்