VIDEO: ‘வாழ்கை ஒரு வட்டம்’!.. 5 வருசத்துக்கு அப்புறம் ‘ரிவெஞ்ச்’ எடுத்த பென் ஸ்டோக்ஸ்.. தரமான செய்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வைட்டுக்கு பதிலடு கொடுக்கும் விதமாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

VIDEO: ‘வாழ்கை ஒரு வட்டம்’!.. 5 வருசத்துக்கு அப்புறம் ‘ரிவெஞ்ச்’ எடுத்த பென் ஸ்டோக்ஸ்.. தரமான செய்கை..!

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸிம் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 155 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

Ben Stokes gets revenge against Carlos Brathwaite in the T20 Blast

அப்போது கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. அந்த கடைசி ஓவரை இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட், முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது கண் கலங்கிய பென் ஸ்டோக்ஸ், சோகத்தில் தலையில் கை வைத்தவாறு மைதானத்திலேயே அமர்ந்துவிட்டார். இது அவரது கிரிக்கெட் பயணத்தில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது T20 Blast 2021 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் Warwickshire மற்றும் Durham அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய Durham அணியில் 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், Warwickshire அணியில் இடம் பெற்றுள்ள கார்லோஸ் பிராத்வைட்டின் ஓவரை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர்.

அப்போது கார்லோஸ் பிராத்வைட் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி என அடுத்தடுத்து பென் ஸ்டோக்ஸ் பறக்கவிட்டார். அப்போட்டியில்  Durham அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் பென் ஸ்டோக்ஸிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2016 டி20 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட வலிக்கு பென் ஸ்டோக்ஸ் தற்போது ரிவெஞ்ச் எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்