"எத்தன தடவ தான் உங்க கிட்ட சொல்றது??..." 'ஸ்டோக்ஸ்' செயலால் எழுந்த 'சர்ச்சை'!... கடுமையாக எச்சரித்த 'நடுவர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து வருவதையடுத்து, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், செய்த செயல் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.


கொரோனா தொற்றுக்கு முன்பு வரை, கிரிக்கெட் போட்டிகளில், பந்தினை எச்சில் போட்டு தடவ அனுமதி இருந்த நிலையில், இந்த தொற்று பரவலின் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில், பந்துகளில் எச்சிலைத் தொட்டு துடைக்கும் பழக்கத்தை, ஐசிசி தடை செய்துள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின், நான்காவது ஓவரின் போது, பென் ஸ்டோக்ஸ், பந்தினை எச்சிலைக் கொண்டு துடைத்தார். இதனைக் கண்ட போட்டி நடுவர் விரேந்தர் ஷர்மா (Virender Sharma), ஸ்டோக்ஸிற்கு எச்சரிக்கை கொடுத்தார்.


மீண்டும் ஒருமுறை, அவர் பந்தினை எச்சில் கொண்டு துடைத்தால், இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கப்படும் என்றும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம், நடுவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், பென் ஸ்டோக்ஸ் இதே போன்று, பந்தினை எச்சில் கொண்டு துடைத்த போது, நடுவர்களிடம் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்