"அதான் கடைசி ODI மேட்ச்.." ஓய்வு அறிவிப்புடன் பென் ஸ்டோக்ஸ் உருக்கமான ட்வீட்.. கலங்கிய ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர், நேற்று (17.07.2022) முடிவடைந்திருந்த நிலையில், இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது.
Also Read | "கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே கோடீஸ்வரரான புதுமாப்பிள்ளை...." ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி.. எப்படி.?
இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில், இங்கிலாந்து அணி பங்கேற்கவுள்ளது.
இங்கிலாந்தில் வைத்து நடைபெறவுள்ள தொடர்களில், 3 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளது.
இதில், முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, நாளை (19.07.2022) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற உள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி ஒரு நாள் போட்டியை ஆடவுள்ளேன். இது சற்று கடினமான முடிவு தான். இங்கிலாந்து அணிக்காக எனது சக வீரர்களுடன் ஆடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசிக்கிறேன். ஒரு அற்புதமான பயணமாக இது அமைந்துவிட்டது.
மூன்று வடிவங்களில் ஆட வேண்டும் என்பது என்னால் தற்போது இயலாத ஒன்று. சற்று பிசியான அட்டவணை இருப்பதால், என் உடல் அதற்கேற்ப தயாராகவும் இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் பயனளிப்பும் அணிக்குக் கிடைப்பதில்லை. அதே போல, மற்றொரு வீரரின் இடத்தில் நான் ஆடுவது போலவும் தோன்றுகிறது. என்னை விட ஜோஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்கள் நல்ல பங்களிப்பை அளிக்க முடியும் என்று நான் கருதுகிறேன். மற்றொருவருக்கு, கிரிக்கெட் வீரர் ஆகும் வாய்ப்பு கிடைத்து, எனக்கு கிடைத்த 11 ஆண்டு நினைவுகள் போல அவர்களுக்கும் கிடைக்கட்டும்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக என்னால் முடிந்த அனைத்தையுமே நான் செய்வேன். தற்போது ஒரு நாள் தொடர் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற்றுள்ளதால் இனி டி 20 போட்டிகளிலும் முழு மூச்சாக இறங்குவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜோஸ் பட்லர் மற்றும் இங்கிலாந்து அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தனது நன்றிகளை குறிப்பிட்ட பென் ஸ்டோக்ஸ், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று வெளியேற வேண்டும் என நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 104 ஒரு நாள் போட்டிகள் ஆடியுள்ள பென் ஸ்டோக்ஸ், நாளை தனது 105 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆட உள்ளார். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ள பென் ஸ்டோக்ஸ், இனி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பென் ஸ்டோக்ஸ்… சச்சின் எழுப்பும் அந்தக் கேள்வி!
- 'கைவிரலில் ஏற்பட்ட காயம்...' சிடி ஸ்கேன் எடுத்தபோது தெரிய வந்த 'அதிர்ச்சி' ரிப்போர்ட்...! - கன்ஃபார்ம் ஆன உடனே பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ள முடிவு...!
- "உங்களுக்கு எல்லாம் 'பணம்' தான் முக்கியம்.." 'ஸ்டோக்ஸ்' மீது சீறிய ரசிகரால் எழுந்த 'பரபரப்பு'!.. இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!
- திடீரென ஷிகர் தவானை பார்த்து... கைகூப்பி வணங்கிய 'ஹர்திக் பாண்டியா'.. பின்னாடி இருக்கும் 'சுவாரஸ்ய' சம்பவம்!.. 'வைரல்' வீடியோ!!
- "இந்தியா பக்கம் திரும்ப வேண்டிய மேட்ச் இது.. இப்டி பண்ணிட்டாங்களே.." 'சர்ச்சை'யை ஏற்படுத்திய அந்த 'சம்பவம்'... கடுப்பான 'ரசிகர்கள்'!!
- "எத்தன தடவ தான் உங்க கிட்ட சொல்றது??..." 'ஸ்டோக்ஸ்' செயலால் எழுந்த 'சர்ச்சை'!... கடுமையாக எச்சரித்த 'நடுவர்'!!
- "இந்த விஷயத்துல 'கோலி' தோத்துட்டாரு... ஸ்டோக்ஸ் தான் 'வின்னர்'..." கடுப்பேத்திய 'முன்னாள்' வீரர்!!
- களத்தில் மோதிக் கொண்ட 'கோலி' - 'ஸ்டோக்ஸ்'.. "அதுக்கு முன்னாடி இதான் நடந்துச்சு..." விளக்கமளித்த 'சிராஜ்'!!
- 'சும்மா சொல்லிட்டு இருக்கத விட...' 'செஞ்சு காட்டுறது ரிஸ்க்...' 'இந்த தடவ பிட்ச் கொஞ்சம்...' - ஸ்டோக்ஸ் கூறிய கருத்து...!
- 'அந்த சானிடைசர கொண்டு வாங்கப்பா...' 'பழக்கதோசத்துல பண்ணிட்டாரு போல...' - பவுலருக்கு எச்சரிக்கை விடுத்த அம்பயர்...!