சிறந்த 'பவுலிங்' யூனிட்டை சுக்கு நூறாக்கிய 'அசத்தல்' கூட்டணி,,... இறுதியில் 'சிஎஸ்கே' ரசிகர்களுக்கு காத்திருந்த 'ஷாக்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.

இனி வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். உத்தப்பா, ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து நடையைக் கட்டினாலும், அதன் பின்னர் ஸ்டோக்ஸுடன் கை கோர்த்த சாம்சனும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

இந்த ஐபிஎல் சீஸனின் சிறந்த பவுலிங் வரிசை கொண்ட மும்பை அணியின் பந்து வீச்சுகளை சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் நாலாபுறமும் சிதறடித்தனர். சற்றே அதிக இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து  ராஜஸ்தான் அணி எட்டிப் பிடித்தது. ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி இந்த சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மற்றொரு வீரரான சாம்சனும் அரை சதம் அடித்தார்.

ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூலிழையில் இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் பறி போனது. முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது. முன்னதாக, பல போட்டிகளுக்கு பிறகு இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்