டீம் இந்தியா ‘ஹலால்’ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டுமா?- பிசிசிஐ நிர்வாகி ‘ஓப்பன் டாக்’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டித் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு இந்த உணவு வகைகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற உத்தரவை பிசிசிஐ பிறப்பித்துள்ளதாக செய்தி ஒன்றி வெளியாகி வைரல் ஆனாது.

Advertising
>
Advertising

வெளியான வைரல் செய்தியின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘ஹலால்’ செய்யப்பட்ட மாமிச உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது. ட்விட்டர் உட்பட சமுக வலைதளங்களில் இதுகுறித்து பெரும் விவாதங்களே நடக்கத் தொடங்கின. இந்த சூழலில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இதுகுறித்து வெளிப்படையாகவே விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய வீரர்கள் மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய அணி வீரர்கள் இதர மாமிசங்களில் ‘ஹலால்’ செய்யப்பட்ட மாமிசங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன. ஆனால், இந்திய அணியில் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கவே இல்லை என்கிறார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால்.

இதுகுறித்து அருண் துமால் கூறுகையில், “இப்படிப்பட்ட உணவு பழக்கம் குறித்து நாங்கள் பேசவே இல்லை. இது போன்ற பழக்கம் நிச்சயமாக அமல்படுத்தப்பட மாட்டாது. இப்படிப்பட்ட உணவு பழக்க உத்தரவை நாங்கள் வெளியிடவே இல்லை. இதுதொடர்பாக எதுவும் வீரர்களுக்கு அறிவிக்கவும் இல்லை. இந்திய அணியில் ஒவ்வொரு வீரரும் அவரவருக்கான உணவுத் தேவையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வீரர்கள் உணவுப் பழக்க முறையில் பிசிசிஐ தலையீடு கிடையவே கிடையாது.

பிசிசிஐ, ஒரு வீரர் இதைத்தான் சாப்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என சொல்லாது. அவர்களுக்கான உணவு முறையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சைவம் ஆக இருக்கலாம், வீகன் ஆக இருக்கலாம், அசைவம் ஆக இருக்கலாம். வீரர்களின் தனிப்பட்ட விருப்பம் அது” எனக் கூறியுள்ளார்.

CRICKET, TEAM INDIA, HALAL MEAT CONTROVERSY, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்