'இந்திய கிரிக்கெட் வரலாற்றில்... முதல் முறையாக'!.. பிசிசிஐ போட்ட மாஸ் ப்ளான்!.. ஏன் இந்த திடீர் முடிவு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு அதிசயம் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நடக்கவிருக்கிறது.
இங்கிலாந்துக்கு சுமார் மூன்றரை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதனால் வீரர்கள் அனைவரும், அவர்களின் குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதனால், ஐபிஎல் சோகம் மறந்து உற்சாகத்தில் உள்ளனர் ரசிகர்கள். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இதற்காக இந்திய அணி வீரர்கள், நாளை (மே 19) புதன்கிழமை முதல், மும்பையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். அனைத்து வீரர்களும் இந்த பயோ - பபுளில் கட்டாயம் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முன்னதாக, மும்பைக்கு வெளியே வசிக்கும் வீரர்கள் அனைவரும் அவரவர்கள் தங்கள் காரிலோ, விமானத்திலோ மும்பை வர வேண்டும் என்று கூறிய பிசிசிஐ, இப்போது அவர்களை அழைக்க தனி விமானம் தயார் செய்துள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், மும்பை பயோ - பபுளில் இணைவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மூன்று முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மூன்றிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவர்கள் மும்பைக்கே அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, ஜூன் 2ம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து கிளம்பிச் செல்கிறது.
இந்திய ஆண்கள் அணி இங்கிலாந்து செல்லும் அதேவேளையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள் மற்றும் சில டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதனையடுத்து, இந்திய ஆண்கள் அணியும், மகளிர் அணியும் ஒரே விமானத்தில் இங்கிலாந்து பயணிக்க உள்ளனர்.
இத்தனை வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இரு அணிகளும் ஒரே விமானத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜின்க்யா ரஹானே (துணைகேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஐஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
லோகேஷ் ராகுல், ரிதிமான் சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்தது. ஆனால், சஹாவுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான்.
இதற்கிடையே, மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் அணியில், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), புனம் ரவுத், பிரியா புனியா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, சினே ராணா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), இந்திராணி ராய் (விக்கெட் கீப்பர்), ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னங்க நடக்குது?.. அவர விட அதிக திறமை யாருக்கு இருக்கு?.. நண்பனுக்காக குரல் கொடுத்த அசாருதீன்!.. முடிவுக்கு வருமா சர்ச்சை?
- 'அவரு அவ்ளோ சீரியஸா எடுத்துப்பாருனு நெனைக்கல'!.. '3 வருஷம் என் கூட பேச்சு வார்த்தை இல்ல'!.. உண்மைகளை உடைத்த உத்தப்பா!
- 'எப்பா சாமி!.. பிசிசிஐ-க்கு ஒரு பெரிய கும்பிடு'!.. 10 நாட்கள் போராட்டம்!.. நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்!
- 'கோடிகள கொட்டி ஏலத்தில எடுக்குறீங்க... எதுக்கு'?.. 'வெளிய சும்மா உட்காரவா'?.. ஸ்டார் வீரர்கள் குறித்து மஞ்சரேக்கர் காட்டம்!
- '2021 ஐபிஎல் வின்னர் 'இவங்க' தான்'!.. திடீரென வெளியான தகவலால்.. அரண்டு போன அணிகள்!.. பிசிசிஐ-க்கே ஷாக் கொடுத்த சம்பவம்!
- "கோலி சீண்டுவாரு... நான் மட்டும் சும்மா இருக்கணுமா"!?.. "இருந்தாலும் சொல்றேன்"... பழைய பகை மறந்து... டிம் பெய்ன் சொன்ன வார்த்தை!
- 'ஆர்சிபி'க்கு எப்ப தான் பொறுப்பு வரும்?.. செம்ம வாய்ப்பு இருந்தும்... இப்படியா சொதப்புவது?.. வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!
- ‘அந்த சம்பவத்துக்கு அப்புறம் 3 வருசம் அவர் என்கிட்ட பேசல’!.. சிஎஸ்கே முன்னாள் வீரருடன் நடந்த சண்டை.. பல வருட சீக்ரெட்டை உடைத்த ராபின்..!
- சும்மா 'டைம் பாஸ்' பண்றதுக்காக ஏதாவது சொல்லுவாரு...' 'வாகனை சீண்டிய முன்னாள் வீரர்...' ஹலோ 'அந்த விஷயத்துல' சிக்கியது நியாபகம் இருக்கா...? - பதிலுக்கு பொளந்து கட்டிய வாகன்...!
- "எத்தனை காலத்துக்கு நான் விளையாடிட்டே இருக்க முடியும்"?.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நேரத்தில்... ஷாக் கொடுத்த ஷமி!