அதிகரிக்கும் ஒமைக்ரான்.. ஐபிஎல் 2022 எங்கு நடக்கும்??.. பிளான் பி ரெடி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று, வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகம் ஏற்பட்டால், ஐபிஎல் போட்டிகள் எப்படி, எங்கு நடைபெறும் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து, சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலக நாடுகள் அனைத்திலும் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து, இதன் உருமாறிய வைரஸ் தொற்றுகளும் மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இன்னும் இதிலிருந்து, முழுமையாக உலக நாடுகள் மீளாத நிலையில், தற்போது ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்று வேகமெடுத்து வருகிறது.
கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் பரவிய இந்த ஒமைக்ரான் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிகவும் வீரியமுள்ள, அதே வேளையில் வேகமாக பரவும் தன்மையுடைய ஒமைக்ரான் தொற்று, இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமெடுத்து வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கை அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் செல்லும் போது, சமூக இடைவெளி மேற்கொண்டு கவனத்துடன் செயல்படவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே, 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதி, இந்தியாவில் வைத்து நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் காரணமாக, மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது.
தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்து வருவதால், ஐபிஎல் போட்டிகளின் நிலை என்ன என்பது பற்றியும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மொத்தம் 8 அணிகள் மட்டுமே பங்கேற்றிருந்தது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக, லக்னோ மற்றும் அகமதாபாத் என இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 8 அணிகளும், விதிகளுக்கு உட்பட்டு 2 முதல் 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள வீரர்களை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கவுள்ளனர். இந்த ஏலம், பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஒமைக்ரான் தொற்றும் ஒரு பக்கம் அதிகரித்து வருவதால், இதனைக் கருத்தில் கொண்டு, முன் கூட்டியே 'பிளான் பி' ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து Cricbuzz வெளியிட்ட செய்தியின் படி, வரும் ஜனவரி மாதம், அனைத்து அணியின் உரிமையாளர்களுடன் ஒரு மீட்டிங் நடத்தி, 15 ஆவது ஐபில் தொடரை நடத்த மாற்று வழி ஒன்றையும் முடிவு செய்யவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
'பிளான் பி' படி, கடடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது போல, இந்த முறை நடத்த வாய்ப்பில்லை என்றும் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. ஒரு வேளை இந்தியாவில், ஒமைக்ரான் தொற்றின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தால், மும்பை மற்றும் புனே அல்லது குஜராத் மாநிலத்தின் நகரங்களான அகமதாபாத், பரோடா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் மட்டும் எந்த அணிக்கும் ஹோம் அட்வான்டேஜ் இல்லாமல் நடத்தலாம் என்றும் அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
மிகவும் அருகேயுள்ள, 2 அல்லது 3 மைதானங்கள் என்றால், நிச்சயம் அணியிலுள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாது என்பது தான் அதற்கு காரணம். இப்படி, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பற்றி, பல்வேறு யூகங்கள் கிளம்பி வந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், அணி உரிமையாளர்களுடன் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகே சரிவர தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரானை பத்திவிட... இதெல்லாம் பத்தாது... செய்யவே கூடாத 'அந்த' தவறு!
- ‘அச்சுறுத்தும் ஒமைக்ரான்’!.. தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இருந்த ‘அறிகுறி’ என்ன..? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!
- தமிழகத்தில் ஒரே நாளில் '33 பேருக்கு' ஓமிக்ரான்...! 'புதிய' கட்டுப்பாடுகள் என்ன...? - தலைமைச்செயலாளர் ஆலோசனை...!
- மறுபடியும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா.. ‘140 பேர் பலி’.. விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- "தடுப்பூசி போடலன்னா 'சம்பளம்' கட்.." 'அதிரடி' கண்டிஷன் போட்ட 'அரசு'.. எந்த 'State'ன்னு தெரிஞ்சுக்கோங்க..
- "ஒமிக்ரான் பாதிச்ச எல்லாருக்கும்... அந்த 'ஒண்ணு' மட்டும் ஒரே மாதிரி இருக்கு.." எச்சரிக்கும் 'விஞ்ஞானிகள்'..
- நம்ம எல்லார் வீட்டுக்கும் 'ஓமிக்ரான்' வரப்போகுது...! - பில்கேட்ஸ் பகிர்ந்த 'எச்சரிக்கை' அறிவிப்பு...!
- மீண்டும் இரவு நேர ‘ஊரடங்கு’ அமலுக்கு வருகிறதா..? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!
- இந்த ‘அறிகுறி’ எல்லாம் இருந்தா சாதாரணமாக எடுத்துக்காதீங்க.. ஓமிக்ரோன் குறித்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- 'பவுண்டரி'க்கு வெளியே பறந்த 'பந்துகள்'.. ஆட்டம் காட்டிய 'தமிழக' வீரர்.. "ஐபிஎல் 'ஏலத்துல' சம்பவம் இருக்கு.."