ஒரு வழியாக கோலிக்கு ‘மரியாதை’ கொடுத்து வழியனுப்பிய பிசிசிஐ!- சர்ச்சைகளுக்கு முடிவா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து தரப்பு ஃபார்மட்டுகளுக்கும் சில வாரங்கள் முன்பு வரை கேப்டன் பொறுப்பில் இருந்தவர் விராட் கோலி. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்தும் மாறியது.

Advertising
>
Advertising

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடப் போகும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அணி விவரம் அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளிலும் கோலி இருந்தார். ஆனால், ஒரு அணியில் மட்டும் தான் அவர் கேப்டனாக நீடித்தார்.

டெஸ்ட் அணிக்கு விராட் கோலி, தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இன்னொரு அறிவிப்பையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்தது.

பிசிசிஐ தரப்பு, கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், ‘அனைத்து இந்திய சீனியர் தேர்வுக் குழு, ரோகித் சர்மாவை இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டனாக நியமனம் செய்வது என்று முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விராட் கோலியிடம் இந்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டதா, அல்லது அவர் தரப்பு இந்த முடிவு குறித்து என்ன தெரிவித்தது என்பன குறித்து எந்த தகவலும் செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை. இதனால் கோலிக்கு இந்த முடிவில் திருப்தி இருந்திருக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக கோலிக்கு சம்மதம் இல்லாமலேயே, பிசிசிஐ தன்னிச்சையாக இப்படியான முடிவை எடுத்திருக்கும் என்று ஆருடம் சொல்லப்படுகிறது.

பிசிசிஐ- யின் உள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள், கோலியிடம் அமைப்பு எடுத்த முடிவு குறத்து சொல்லப்பட்டது என்றும், அவராகவே முன் வந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்கிற முடிவில் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்வதில் அதிக விருப்பம் இருந்துள்ளது. இதனால் தான், பிசிசிஐ ‘கெடு’ கொடுத்த பின்னரும் தன் முடிவில் எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் இருந்துள்ளார் கோலி. இதுவே ரசிகர்களின் கொதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

இத்தனை ஆண்டு காலம் அணிக்காக உழைத்த கோலியை இப்படியா வழியனுப்பி வைப்பது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கடுப்பை பிசிசிஐ அமைப்பை நோக்கி வெளிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பிசிசிஐ, கோலிக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ- யின் பதிவில், ‘அணியை துடிப்புடனும், சீரிய நோக்குடனும் வழிநடத்திய தலைவர். நன்றி கேப்டன் விராட் கோலி’ என்று விராட்டின் படத்துடனும் சில புள்ளி விவரங்களுடன் பதிவு போடப்பட்டுள்ளது.

இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள விராட் கோலி, 65ல் வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றி விகிதம் 70.43 சதவீதம் ஆகும்.

CRICKET, VIRAT KOHLI, BCCI, பிசிசிஐ, கோலி, கங்குலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்