அம்மாடியோவ்..! ஐபிஎல் தொடரை திடீரென நிறுத்துனதுனால இவ்ளோ கோடி நஷ்டமாகுமா..? தலைசுற்ற வைக்கும் தொகை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தியதால் பிசிசிஐக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. தொடர் முழுமையாக முடிவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ பல கோடி ரூபாய் நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து PTI-க்கு தகவல் தெரிவித்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், ‘இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டமடைய வாய்ப்புள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால், தொலைக்காட்சியில் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனால் Star Sports தொலைக்காட்சி, ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆண்டுக்கு 3,269 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 16,347 கோடி ரூபாய்க்கு பிசிசிஐயிடம் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் திடீரென நிறுத்தப்பட்டதால் 1,690 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லபடுகிறது. அதேபோல் செல்போன் தயாரிப்பு நிறுவனமான VIVO, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் என்ற முறையில் 440 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. ஆனால் தொடர் திடீரென நிறுத்தப்பட்டதால், அந்நிறுவனத்துக்கு பாதி தொகையை திருப்பி தரவேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

அதேபோல் இணை ஸ்பான்சர்களான  Unacademy, Dream11, CRED, Upstox, Tata Motors ஆகிய நிறுவனங்கள் தலா 120 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதனால் இழப்பை தவிர்க்க தொடரை மீண்டும் தொடங்க வேண்டிய நெருக்கடியில் பிசிசிஐ உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் எஞ்சியுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் (Brijesh Patel), கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து வரும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் நடத்த வாய்ப்புள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

News Credits: The Indian Express

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்