எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஏன் இந்தியாவில் நடத்தல..? இதுதான் காரணமா..? பிசிசிஐ செயலாளர் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் எஞ்சிய ஐபிஎல் தொடரை நடத்தாதற்கான காரணம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரீயர் ஆகியோருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து டெல்லி அணியின் அமித் மிஸ்ரா, ஹைதராபாத் அணியின் சாஹா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இப்படி வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததை அடுத்து, ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது.

மொத்தாம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இதனால் எஞ்சிய போட்டிகளை எங்கு எப்போது நடத்தவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றதுபோல், இந்த ஆண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை அங்கு நடந்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது.

இதனை அடுத்து நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் நடத்தாமல் எதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ‘செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆரம்பிக்கிறது. இதனால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சரியாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்தோம்’ என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்