‘இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் இனி இவங்கதான்’... ‘பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு’... ‘ஆஸ்திரேலிய தொடரில் புதிய ஜெர்ஸி மாற வாய்ப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக இ-ஸ்போர்ட்ஸ் நிறுவனமான MPL உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐயின் கிட்ஸ் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையில் NIKE நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தின் 5 வருட கால ஒப்பந்தம் தற்போது முடிவடைந்த நிலையில், தற்போது MPL ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் கிட்ஸ் ஸ்பான்சர் மற்றும் வணிக பங்குதாரருக்கான புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது ஐபிஎல்லின் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள், சிபிஎல் அணி, அயர்லாந்து மற்றும் யூஏஇ வாரியங்களுடன் ஸ்பான்சர்சிப் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ஆடவர் அணி, மகளிர் அணி மற்றும் அண்டர் -19 அணிகளுக்கு கிட் ஸ்பான்சர்ஷிப் செய்யவுள்ளது.

இந்த ஒப்பந்தம் நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஜெர்சி, உபகரணங்கள், ஷுஸ் போன்றவற்றையும் எம்பிஎல் வழங்கும். வரும் ஆஸ்திரேலிய தொடரிலிருந்தே இந்த ஒப்பந்தம் துவங்கவுள்ளது.

இந்திய அணியினருக்கு ஆஸ்திரேலிய தொடரில் புதிய ஜெர்சி வழங்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் ஜெர்சி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்