'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - தென்னாபிரிக்க தொடரின் போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டி வீரர்களுக்கு சில வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளை ஆடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி இன்று மதியம் தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதுமுள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் என்பது உறுதியான நிலையில் பிசிசிஐ கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வீரர்களை தற்காத்துக் கொள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'அணியின் மருத்துவக் குழு, கொரோனா வைரசின் தற்போதைய நிலை குறித்து கவனித்து வருகிறது. மேலும் வீரர்கள் போட்டியின் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தெரிவித்துள்ளோம்' என்றது. 'சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவுதல், கையை சுத்தம் செய்தல், தும்மல் மற்றும் இருமலின் போது வாயை மறைத்துக் கொள்ளுதல், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவக்குழுவிடம் தெரிவித்தல், தெரியாதவர்களுடன் செல்பி எடுப்பதோ, அவர்களை தொடுவதோ தவிர்த்தல் வேண்டும்' என வழிமுறைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- 'கொரோனா' வைரஸ்னா என்ன ? ... 'நாங்க' எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது ? ... குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை சொல்லும் 'வாயு' காமிக்ஸ் !
- VIDEO: ‘பறந்து வந்து தாக்கிய பந்து’.. மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அம்பயர்.. அதிர்ச்சி வீடியோ..!
- 'குட் மார்னிங் மக்களே' ... இந்த நாளை இனிய நாளாக ஆரம்பித்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ... 'கொரோனா' தமிழ்நாடு அப்டேட்
- எங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி?
- கேட்டை 'இழுத்து' மூடுங்க...எல்லாரும் 'வீட்ல' பாத்துக்கட்டும் ... உண்மையிலேயே 'இப்டித்தான்' நடக்க போகுதா?
- பந்தை 'சொழட்ட' தெரியாதவங்க எல்லாம் 'ஸ்பின்னராம்'... என்ன பொசுக்குன்னு 'இப்டி' சொல்லிட்டாரு... யாருப்பா அது?
- 'இத்தாலி'யிலிருந்து 'கேரளா' வந்து ... ஒரே குடும்பத்தை தாக்கிய 'கொரோனா' ... இந்தியாவில் அதிகரித்த எண்ணிக்கை
- இனி 'இந்தியா' டீம் பெர்பார்மன்ஸ் வெறித்தனமா இருக்கும் ... தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ... மீண்டும் அணியில் இணைந்த வீரர்கள்
- 'தொல்ல' தாங்க முடில... பேசாம பேன்ஸ் இல்லாம 'ஐபிஎல்' நடத்திரலாமா?... ரூம் போட்டு 'யோசிக்கும்' பிசிசிஐ!