‘உயரிய கேல் ரத்னா விருது’!.. பிசிசிஐ பரிந்துரைத்த பட்டியலில் இடம்பிடித்த 2 தமிழர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய அரசு வழங்கும் கேல் ரத்னா விருத்துக்கு இந்திய கிரிக்கெட்டை வீரர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வினை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான மிதாலிராஜ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளார். தற்போது இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
அதேபோல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரது பெயரையும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது. இதில் கடந்த முறை ஷிகர் தவானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
பதவிக்கு வந்த முதல் நாளே... அதிரடி காட்டிய டிஜிபி சைலேந்திர பாபு!.. கடுமையான சவால்!.. தரமான சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘கடைசி நாள் ஆட்டத்தில் நடந்த திருப்புமுனை’.. அஸ்வின் சுழலில் இருந்து தப்பியது எப்படி..? வில்லியம்சன் சொன்ன சீக்ரெட்..!
- ‘ஐசிசி கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு’!.. இந்தியாவில் நடத்த நோ சான்ஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன முக்கிய தகவல்..!
- 'கோலிய கேப்டன் பொறுப்புல இருந்து தூக்குங்க'!.. நெருங்கும் டி20 உலகக் கோப்பை!.. பிசிசிஐ-யை எச்சரித்த முன்னாள் வீரர்!
- "மாபெரும் குற்றம்"!.. 'அந்த ஒரு விஷயத்த மட்டும் செஞ்சுடாதீங்க'!.. பிசிசிஐ-யை அலெர்ட் செய்த முன்னாள் வீரர்!.. மல்லுக்கட்டும் ரசிகர்கள்!
- 'இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜா காரணமா'?.. மீண்டும் ஜடேஜாவை வம்பிழுத்த மஞ்சரேக்கர்!.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
- எல்லாரு முன்னாடியும் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரு!.. கோலியின் பகீர் குற்றச்சாட்டு!.. பதறிப்போன பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
- "நான் தான் அப்பவே சொன்னேன்ல!.. ஏன் கேட்கல"?.. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் 'இது' தான்!.. சச்சின் காட்டமான விமர்சனம்!
- "வேண்டாம்" என மறுத்த சீனியர் வீரர்கள்!.. முடிவை மாற்றிக் கொள்ளாத கோலி!.. இந்திய அணியின் தோல்விக்கு 'இது' தான் காரணமா?
- 'நியூசிலாந்த வெறுப்பேத்துங்க'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற... இந்திய அணிக்கு 'எமோஷனல் அட்வைஸ்' கொடுத்த முன்னாள் வீரர்!
- 'இந்திய அணிய இதுக்கு மேல மோசமா கழுவி ஊத்த முடியாது'!.. வாய வச்சுட்டு சும்மா இல்லாம... ரசிகர்களிடம் மீண்டும் வாங்கிக் கட்டிய வாகன்!