‘இவ்ளோ பாதுகாப்பையும் மீறி எப்படி கொரோனா பரவுனது..?’.. ஒருவழியாக ‘மவுனம்’ கலைத்த சவுரவ் கங்குலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் இதுவரை முடிந்துள்ளன. இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் தொடரை தற்காலிகமாக நிறுத்துவதாக பிசிசிஐ தெரிவித்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், இந்த ஆண்டும் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் கிரிக்கெட் வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பயோ பபுளில் இருந்து பாதுகாப்பாக விளையாடி வந்தனர். இந்த சமயத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் ஷர்மா ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்து மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் சாஹா மற்றும் டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ அவசர ஆலோசனை மேற்கொண்டது. இதனை அடுத்து தற்காலிகமாக ஐபிஎல் தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ தெரிவித்தது. இவ்வளது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி எப்படி கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவியது? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பின் The Indian Express சேனலுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘எங்களுக்கு வந்த தகவலின்படி யாரும் பயோ பபுளை மீறவில்லை. ஆனாலும் எப்படி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியது என்பது தெரியவில்லை’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன காமெடி பண்றீங்களா?.. ரூ. 100 கோடி எடுத்து வச்சுட்டு... அடுத்த வேலைய பாருங்க'!.. பிசிசிஐ-யை உலுக்கிய... முன்னாள் வீரரின் டிமாண்ட்!
- ஐபிஎல்-லில் கொரோனா பரவியது எப்படி?.. வருண் சக்கரவர்த்தி முதல் அமித் மிஸ்ரா வரை... நடுங்கவைக்கும் தொற்றின் வேகம்!.. ஆடிப்போன பிசிசிஐ!
- ஆஸ்திரேலிய வீரர்களுக்கு... இரண்டு ஆப்ஷன்களை முன்வைத்த பிசிசிஐ!.. ரொம்ப பாவம்!.. என்ன முடிவு எடுப்பார்கள்?
- VIDEO: இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லங்க...! 'ஐபிஎல் வீரர்கள் பஸ்ஸில் போறப்போ...' 'உண்மையாவே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதா...? 'வைரலான வீடியோ...' - விளக்கம் அளித்துள்ள போலீசார்...!
- 'கண்ணுக்குள்ள வச்சு வீரர்களை பாதுகாத்த பிசிசிஐ!.. அப்படி இருந்தும் வேலையைக் காட்டிய கொரோனா'!.. பயோ பபுள் உடைந்தது எப்படி?
- 'அவங்க' ஒண்ணும் 'முட்டாள்கள்' இல்ல சரியா...! 'ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க...' - பிசிசிஐ-ஐ விளாசி தள்ளிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்...!
- ‘போட்டியை ஒத்திதான் வச்சிருக்கோம், நிறுத்தல’!.. மறுபடியும் ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும்?.. ஐபிஎல் தலைவர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
- ‘சிஎஸ்கே அணியை துரத்தும் கொரோனா’!.. மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி.. வெளியான தகவல்..!
- 'ஆன்லைன் வீடியோ கால்!.. பதறியடித்து ஓடிவந்த அணி நிர்வாகிகள்'!.. வெறும் 10 நிமிடத்தில் ஐபிஎல்-ஐ கேன்சல் செய்த பிசிசிஐ!.. திடுக்கிடும் பின்னணி!
- இந்த வருசம் எப்படியும் ‘கப்’ ஜெயிச்சிறலாம்னு இருந்தோமே.. இப்படி ‘மண்ணை’ அள்ளி போட்டாங்களே.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!