'கோலி' - 'பிசிசிஐ' விவகாரத்தில் அடுத்த 'ட்விஸ்ட்'!!.. "என்னங்க இது.. இவ்ளோ 'பெரிய' விஷயமா இருக்கே??.. பரபரக்கும் 'கிரிக்கெட்' வட்டாரம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சில தினங்களாக, கிரிக்கெட் உலகை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் செய்தி என்றால், அது கோலி - பிசிசிஐ விவகாரம் தான்.

Advertising
>
Advertising

டி 20 உலக கோப்பைத் தொடரில், கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. டி 20 உலக கோப்பை போட்டித் தொடருக்கு முன்பாகவே, தான் உலக கோப்பை போட்டி முடிவடைந்ததும், கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக கோலி தெரிவித்திருந்தார். அதன்படி, பதவி விலகுவதாகவும் அறிவித்தார். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில், தலைமை தாங்குவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை அறிவித்திருந்தது கடும் பரபரப்பை உண்டாக்கியது. தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ தலைமை குழு, ஐம்பது ஓவர் மற்றும் டி 20 போட்டி என இரண்டிலும் தனித்தனி கேப்டன்கள் வேண்டாம் என்றும், அதனால்  இரண்டிலும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்பதற்காக ரோஹித் ஷர்மாவை நியமித்ததாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குறிப்பிட்டார்.

மேலும், டி 20 போட்டிகளிலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க கோலியை கேட்டுக் கொண்டோம். ஆனால் அதற்கு கோலி மறுப்பு தெரிவித்தார் என கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், இது பற்றிப் பேசிய கோலி, தான் ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது பற்றி, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், மேலும், தன்னை யாரும் டி 20 கேப்டனாக தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொள்ளவில்லை என்றும் கோலி கூறினார்.

இரு தரப்பினரும், வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்ததால், கிரிக்கெட் வட்டாரத்தில் இந்திய அணியின் செயல்பாடு, அதிகம் கேள்விகளை எழுப்பியது. அது மட்டுமில்லாமல், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள், பிசிசிஐ மற்றும் வீரர்களுக்கிடையே எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க சரியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இன்னும் கோலி - பிசிசிஐ விவகாரம் ஓய்ந்த பாடில்லை. அப்படி இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி, இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது. கோலியை ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்க, கடந்த நான்கு மாத காலமாகவே, பிசிசிஐ திட்டமிட்டதாக பல முன்னணி பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு வருகிறது.


கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகே, ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை விலக்கியதாக பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ள நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பே அவர்கள் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க திட்டமிட்ட தகவல், மேலும் நெருப்பை கொளுத்தி விட்டுள்ளது.

BCCI, VIRATKOHLI, VIRAT KOHLI, BCCI, கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்