இது என்னய்யா புது ட்விஸ்ட்டா இருக்கு..! இந்த வருசம் ஐபிஎல் அந்த நாட்டுலயா நடக்கபோகுது..? பிசிசிஐ-ன் ப்ளான்-B இதுதானா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் 14-வது சீசன் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவியது. அதனால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. இதனை அடுத்து எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இதனிடையே லக்னோ, அகமதாபாத் என்ற 2 புதிய அணிகள் இந்த ஆண்டு முதல் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா? வேண்டாமா? என்று பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அங்கு இந்திய வீரர்களை பயோ பபுளில் தங்க வைக்க காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இந்திய வீரர்கள் கூறியுள்ளனர்.

அதனால் தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்நாட்டில் நடைபெற வாய்ப்பில்லை என்றால் பிளான் B-ஆக இலங்கையில் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, IPL2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்