இனிமேல் ‘தல’ய இந்த ஜெர்சியில பார்க்க முடியாதே.. உருகிய ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ‘சர்ப்ரைஸ்’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கவுரவிக்கும் விதமாக பிசிசிஐ செய்த செயலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

13-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி நேராக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பட்டியலை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. திட்டமிட்டபடி ஆஸ்திரேலியா தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தோனி ஓய்வு பெற்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணி ஒரு பெரிய தொடரில் விளையாட உள்ளது. இந்தநிலையில் தோனியை இந்திய ஜெர்சியில் இனிமேல் பார்க்க முடியாது என ரசிகர்கள் சற்று வருத்தமடைந்தனர்.

பலரும் தோனிக்கு பிரியா விடை போட்டி நடத்த வேண்டும் என நினைத்தபோது தோனி எதையும் எதிர்பார்க்காமல் ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். தற்போது தோனியை கவர கொடுக்கும் விதமாக பிசிசிஐ ஒரு செயலை செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியை அறிவித்த கையோடு தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் முகப்பு பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை வைத்து ‘தேங்க்யூ எம்.எஸ் தோனி’ என அவரின் சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்த பதிவு தோனியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்