இனிமே அதை 'நாங்களே' பாத்துக்கறோம்... கோலி-ரவி சாஸ்திரிக்கு... 'கங்குலி' வைத்த செக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் வீரர்கள் உடன் அவரது மனைவி அல்லது தோழிகள் உடன் இருப்பது குறித்த முடிவை பிசிசிஐ அதிகாரிகளே எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுநாள்வரை இதுகுறித்து முடிவெடுக்கும் பொறுப்பு கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வசம் இருந்தது. இந்தநிலையில் கங்குலி தலைமையிலான பிசிசிஐ அதை ரத்து செய்துள்ளது.

முன்னதாக இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது முதல் இரண்டு வாரங்கள் வீரர்களின் மனைவி, தோழிகள் மற்றும் குடும்பத்தினரை உடன் தங்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை இருந்தது. ஆனால் வீரர்கள் பலர் இந்த உத்தரவை பின்பற்றவில்லை. இது முந்தைய பிசிசிஐ கமிட்டிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

இதனால் தான் அதுகுறித்த முடிவை பிசிசிஐ மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அந்த நேரத்தில் எதுவும் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்